சென்னை, ஆக.14- பேராசிரியர் மா.நன்ன னின் நூல்கள் நாட்டுடமை யாக்கப்பட்டத்தையடுத்து அதற்கான நூலுரிமை பரிவுத் தொகையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி னார். தமிழில் 100க்கும் மேற் பட்ட புத்தங்களை எழுதிய பேராசிரியர் முனைவர் மா. நன்னனின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று கடந்த மாதம் நடை பெற்ற நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழா வில் முதல்வர் மு.க. ஸ்டா லின் அறிவித்தார். இதையடுத்து நன்னனின் நூல்கள் நாட்டுடைமை யாக்கப்பட்டதற்கான நூலு ரிமை பரிவுத்தொகை ரூ. 10 லட்சத்திற்கான காசோ லையை அவரது துணை வியாரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்களன்று (ஆக.14) வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை யால் தமிழ்ச்சான்றோர்க ளின் நூல்கள் நாட்டுடைமை யாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண் ணிக்கை, சிறப்பு ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரி மையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 173 தமிழறி ஞர்களின் நூல்கள் நாட்டு டைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்க ளுக்கு ரூ. 13.87 கோடி நூலுரிமைத் தொகை அர சால் ஒப்பளிப்பு செய்யப் பட்டு வழங்கப்பட்டுள்ளது.