நாகப்பட்டினம், ஜன. 19- விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவரை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் வீ.பி.நாகைமாலி பாராட்டினார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி யில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் வி. மோகன்குமார். இவருக்கு வயது பதி மூன்று. இவருடைய தந்தை விஜய குமார். தாய் நிரோஷா. தேவூர் அருகே உள்ள கீழபெருந்தலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தை லாரி ஓட்டுனர் ஆவார். கோவா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய யான்மூடோ(கராத்தே) போட்டி யில் கலந்துகொண்டு இரண்டு வெண்கலபதக்கங்கள்வென்று வந்துள்ளார் மாணவர் வி.மோகன்குமார். அரசு பள்ளியில் பயின்று கொண்டே தனது தனித்த திறமையால் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டும் விதமாக மாணவர், அவருடைய தாய், தந்தை மற்றும் பயிற்சி அளித்த கராத்தே பயிற்சி யாளர் இரா.குணசேகரன் ஆகியோ ரை தனது சட்டமன்ற அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களை பாராட்டி னார். இந்த நிகழ்வின் போது சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திர போஸ் உடனிருந்தார். இம் மாணவர்இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய யான்மூடோ (கராத்தே) போட்டியில் கலந்து கொள்ளஉள்ளார் என்பதும், அந்தப்போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்குமாறு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி. நாகைமாலி வாழ்த்தி பாராட்டினார்.