tamilnadu

img

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்

சென்னை, மே 19 - உக்ரைன் போரை பயன்படுத்தி உலக அரசியலை கட்டுப் படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோவை பலப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார். இ.பா.சிந்தன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘உக்ரைனில் என்ன நடக்கிறது?’ நூல் வெளியீட்டு  நிகழ்ச்சி புதனன்று (மே 18) சென்னையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட கட்சி கல்விக் குழு நடத்திய இந்நிகழ்வில் நூலை என்.குணசேகரன் வெளி யிட, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.பாரதி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் என்.குணசேகரன் பேசியதன் சுருக்கம் வருமாறு: இரண்டாம் உலகப்போருக்கு பின் போரற்ற உலகம் எனும் முழக்கம் எழுந்தது. ஆனால், சோவியத் ரஷ்யாவை வீழ்த்த வும், ஜெர்மனை வளரவிடாமல் தடுக்கவும் நேட்டோ அமைப்பை அமெரிக்கா உருவாக்கியது. சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகும் நேட்டோ தொடர்கிறது. இந்த நேட்டோ காரணமாகவே ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்டுள்ளது. இந்தப்போரை முடிவுக்கு கொண்டுவர மனிதநேயம் மிக்க வர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் உக்ரைன் ஆளும் கூட்டம் போரை நீட்டிக்க விரும்புகிறது. உலகம் முழுவதும் ஆயுதம் விற்பனை செய்யும் கூட்டத்தின் பிரதிநிதிகள் ஐரோப்பா, அமெரிக்காவின் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இந்தக் கூட்டம், போரை தங்களது லாப வேட்டைக்கும், மூலதனக் குவியலுக்கும் வாய்ப்பாகக் கருதுகிறது.

ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி

மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை ஒருங்கி ணைந்த முறையில் தடையின்றி வழங்க வேண்டுமென்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஆகவே, போர் தற்போதைக்கு முடிவுக்கு வராது. இந்தப்போரை பயன்படுத்தி ஐரோப்பிய, ஆசிய அர சியலை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது.  அதற்காக நேட்டோவை பலப்படுத்துகிறது.  நேட்டோவிற்குள் புதிய நாடுகளை சேர்க்கிறது. அதன்வாயிலாக ஏகாதிபத்தியத்திற்குள் உள்ள முரண்பாடுகளை கட்டுப்படுத்தி, உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை செய்கிறது.

இந்தியாவுடன் உறவு ஏன்? 

மேலும், ரஷ்யாவை பலவீனப்படுத்தி, சீனாவின் பொரு ளாதார, அரசியல் வல்லமையை கட்டுப்படுத்த இந்தியா வுடன் உறவு கொண்டாடுகிறது. இதன்வாயிலாக உலக அர சியலை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. ஏமன், சிரியாவை உருக் குலைப்பதிலும், இலங்கை பொருளாதார நெருக்கடியிலும், இந்தியாவில் எல்ஐசியை விற்பதிலும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் தலையீடு உள்ளது. 500 கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக உலகம் வேட்டையாடப்படுகிறது; உலகின் இயற்கைவளம் அழிக்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் ரஷ்யா-உக்ரைன் போர் நீடிக்கும். பேச்சுவார்த்தை மூலமே போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும். இதற்கு வெகு மக்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும். அடையாள அணிதிரட்டல், இனவெறி போன்றவை வர்க்க ஒற்றுமையை சிதைப்பதோடு, ஏகாதிபத்தியத்திற்கு ஆதர வாகவே உள்ளன. இதுவே உக்ரைன் போரின் படிப்பி னையாக உள்ளது. உக்ரைனில் இரண்டுமுறை ஆட்சிக்க விழ்ப்பு நடந்துள்ளது. அவற்றை ஆரெஞ்ச் புரட்சி, மைதானப் புரட்சி என்றனர். ஆளும் வர்க்கத்தை முற்றாக வீழ்த்தி, கோடான கோடி உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அமைவதுதான் புரட்சி. புரட்சி என்ற வார்த்தையை மலினப்படுத்த ஆட்சிக் கவிழ்ப்பை புரட்சி என்றார்கள்.

ஒருசார்பு ஊடகங்கள்

ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்தது. மின்சாரம் உள்ளிட்ட பல் வேறு தேவைகளுக்கு ரஷ்யாவை சார்ந்து இருப்பதாலும், அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதாலும் அமெரிக்காவின் துதிபாடியான பிரத மர்  இந்த நிலையை எடுத்துள்ளார். சிஎன்என் போன்ற சேனல் கள் முதலாளித்துவவாதிகளால் நடத்தப்படுகின்றன. அவை கார்ப்பரேட்டுகளின் குரல்களையே பிரதிபலிக்கின்றன. அவற்றைப் பின்பற்றியே பிற ஊடகங்களும் இயங்குகின் றன. அதனால் இந்த ஊடகங்கள் ஒருசார்பான செய்திக ளையே வெளியிடுகின்றன. போருக்கு எதிரான முழக்கம் அழுத்தமாக உலகம் முழுக்க ஒலிக்க வேண்டும். இடதுசாரிகளின் பின்னால் உலகம் அணி திரண்டால்தான் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியும். ஏகாதி பத்திய முறைமை அழிந்தால்தான் போர், வேலையின்மை, வறுமைக்கு முடிவு கட்ட முடியும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்விற்கு தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கள் ஏ.பாக்கியம், க.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ம.சித்ரகலா, எஸ்எப்ஐ மாநில துணைத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, பாரதி புத்தகாலயம் மேலாளர் எம்.சிராஜ் உள்ளிட்டோர் பேசினர்.


 

;