எஸ்.நூர்முகமது, எம்.ராமகிருஷ்ணன்
கடந்த பல ஆண்டுகளாக தீவிர வாதிகள் என தவறாக முத்தி ரை குத்தப்பட்டு நீதிக்குப் புறம்பாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2019-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆயிரக்கணக்கான சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வந்தது. அப்போதும், தமிழ்நாடு சிறைச்சாலைகளில் நீதிக்கு புறம்பாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சென்னையில் மாநாடு நடத்தி, தமிழகம் முழுவதும் பல்லா யிரக்கணக்கான மக்களிடம் கையெழுத்து பெறப்பட்ட மனுவை அரசிடம் அளித்தது. தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளைவாக, முதற்கட்ட மாக 41 முஸ்லிம் சிறைவாசிகள் விடு தலை செய்யப்பட்டனர். மீதமுள்ள சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை சிறுபான்மை மக்கள் நலக் குழு தொடர்ந்து வலியுறுத்திவந்தது.
புதிதாக 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆதிநாதன் அவர்கள் தலைமை யில் ஒரு குழு அமைத்து எஞ்சியுள்ள சிறைவாசிகள் பற்றிய விவரங்களை தொகுத்து, மரணமடைந்தவர்கள் போக, தற்போது உள்ள 20 முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய ஆலோசனை வழங்கியது. ஆய்ந்து அறிந்து, முழுமையான விசாரணை அடிப்படையில் நீதிபதி என். ஆதிநாதன் அவர்கள் தலைமை யிலான குழுவால் முன்வைக்கப்பட்ட இந்த ஆலோசனையை ஏற்று, நீதிக்குப் புறம்பாக சிறை வைக்கப் பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான ஆணை யை ஆளுநர் அவர்களின் ஒப்புத லுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், ஆளுநர் இதுவரை ஒப்பு தல் அளிக்காதது வருத்தமளிக்கிறது. இதன்மீது தமிழ்நாடு ஆளுநர் எப்போதும் போல் காலதாமதம் செய்வது நியாயமற்றது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 20, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைச் சாலைகளில் தவறிழைக்காத நிலையில், கொடும் துன்பங்களை அனுபவித்து, தனது இளமை முழு வதையும் சிறைச்சாலையின் கொட்டடிகளில் கழித்து, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, மனரீதி யாக துன்ப துயரங்களை சுமந்து வாழ்ந்து வரும் முஸ்லிம் சிறைவாசி களை உடனடியாக விடுதலை செய்வதுதான் நீதியாக அமையும். எனவே, தமிழ்நாடு ஆளுநர் இந்த விடுதலையில் ஒரு நிமிடம் கூட காலதாமதம் செய்யாமல் உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்.