சென்னை, மார்ச் 21- முன்னாள் பிரத மர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டு சிறை வாசத்திற்கு பின் விடுவிக்கப்பட்டு இருக்கும் முருகன், தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு ‘விசா’ எடுக்க விண் ணப்பிக்க போவதாகவும், அவ்வாறு விண்ணப்பிக்க வேண்டுமானால் அதற்கு புகைப்படத்துடன் கூடிய அடை யாள அட்டை கட்டாயம் என்பதால், தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகிய நிலையில், முரு கனின் வழக்கை வேறு அமர்வில் பட்டிய லிடப்பட உள்ளது.