tamilnadu

img

நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிடுக!

மதுரை, ஜூன் 19- தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி  அலுவலர் சங்க 9 ஆவது மாநில  மாநாடு  மதுரை மேலூர் மூவேந்தர்  பண்பாட்டுக் கழகம் மண்டபத்தில் சு.நடராஜன் வளாகம், க.பாலு கண்ணன் அரங்கத்தில் ஜூன் 19 ஞாயி றன்று நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாநிலத் தலைவர்   செ.அ.செய்யதுஉசேன் தலைமை வகித்தார்.  வரவேற்புக்குழு தலைவர் க.நீதிராஜா வரவேற்றார். மாநிலச் செயலாளர் பெ.தியாகராஜன் அஞ்  சலி தீர்மானம் வாசித்தார். அரசு ஊழி யர் சங்க மாநிலப் பொதுச் செயலா ளர் ஆ.செல்வம் துவக்கி வைத்து  உரையாற்றினார்.  வேலையறிக்கை யை மாநிலப் பொதுச் செயலாளர் மு.தாமோதரன், வரவு-செலவு அறிக்கையை  மாநிலப் பொருளா ளர் கா.முருகானந்தம்  ஆகியோர் சமர்ப்பித்தனர். வணிகவரி - பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மேலூர் நகர் மன்றத் தலைவர் உ.முகமது யாசின், நகர்மன்றத் துணைத் தலை வர் சி.எஸ்.இளஞ்செழியன் மற்றும் தோழமைச் சங்க மாநில நிர்வாகி களான  எஸ்.கனகராஜ்,  துரை.செந்  தில்குமார், செந்தூர் ராஜன், இரா.தமிழ், ஜெ.மூர்த்தி, பெ.அம்பேத்கர்,  சு.பாண்டிசெல்வி மற்றும்  சங்கத் தின் முன்னாள் மாநிலத் தலைவர் பா.இராமமூர்த்தி, முன்னாள் மாநி லச் செயலாளர் கே.எஸ்.இளங்கோ வன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  அரசு ஊழியர் சங்க மாநிலத் தலை வர் மு.அன்பரசு நிறைவுரையாற்றி னார்.  வரவேற்புக் குழு பொருளாளர்  மு.முகமதுரஷித் நன்றி கூறினார்.

புதிய நிர்வாகிகள்

மாநில மாநாட்டில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநி லத்தலைவராக  கா.முருகானந்தம், மாநிலப்  பொதுச்செயலாளராக மு. தாமோதரன், மாநிலப் பொருளாள ராக இரா.சாமிநாதன், துணைப் பொதுச்செயலாளர்களாக இரா.குமரவேல், சி.எம்.மகுடீஸ்ரன், பிரதான்பாபு, தியாகராஜன் மற்றும் மாநில துணைத்தலைவர்கள் , மாநி லச் செயலாளர்கள், தலைமை  நிலை யச்செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர், தணிக்கையாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்

தீர்மானங்கள்

நகராட்சி, மாநகராட்சி ஊழி யர்களை அரசு  ஊழியர்களாக அறி வித்து  கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க கோரியும், நகராட்சி மாநகராட்சிகளுக்கு உரிய பணியிடங்களை தோற்றுவித்திட வேண்டும்.  1.10.1996 க்கு முன்பாக  பணியில் சேர்ந்த தினக் கூலி பணி யாளர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் மூன்று கட்ட பதிவு உயர்வுகளை வழங்க வேண்டும். சரண் விடுப்பை மீண்டும் அளிக்க  வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.