tamilnadu

img

500-க்கும் மேற்பட்ட படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

மயிலாடுதுறை, அக்.15- வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில், மீனவர்கள் தங்க ளது படகுகளை பாதுகாப்பாக கரை யோரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் முழு வதும் திங்கள் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் லேசா னது முதல் கனமழை என இடை விடாமல் பெய்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது வீடுகளுக்கு நனைந்தபடியே சென்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் வாகனத்தை இயக்க முடி யாமல் சிரமப்பட்டனர். இந்த மழை  நீடித்தால் சம்பா நடவு பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்படும் என்பதால்  விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.  மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளகோவில், பெருமாள்பேட்டை, சின்னங்குடி, தாழம்பேட்டை உள்ளிட்ட தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீன வர்கள், தங்களது விசைப்படகு, பைபர்  படகு மற்றும் நாட்டு படகு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட படகுகளை கரையில் பாதுகாப்பு நிறுத்தி வைத்துள்ளனர்.  செவ்வாயன்று டெல்டா மாவட்ட களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை அளிக்கப்பட்டது. ஆனால் மயி லாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கியதால் உள் கிரா மங்களிலிருந்து  பேருந்து மூலம் நகரப் பகுதிகளுக்கு வரும் மாணவர் கள் மழையில் நனைந்தபடி வீட்டிற்குச்  சென்றனர்.