tamilnadu

200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை: 152 மருத்துவர்கள் வரவழைப்பு

200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை: 152 மருத்துவர்கள் வரவழைப்பு 

சென்னை, அக். 15 - கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகள் குறித்தும், சட்டமன்றத் தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்தார். இரவு 7.45 மணிக்கு முதல் நபர் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ச்சியாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார். அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை  அளிப்பதற்காக சேலம், நாமக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து 152 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவி யாளர்கள் வந்து பணியில் ஈடுபட்டதாக முதல மைச்சர் குறிப்பிட்டார். பொது சுகாதார இயக்கு நர் தலைமையில் கூடுதல் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். கரூர் மருத்துவமனையில் 700 படுக்கைகள் இருந்தாலும், கூடுதலாக 400 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் விளக்கினார். 24 மணி நேரமும் அவசர சிகிச்சை, சிடி ஸ்கேன், ஆய்வகங்கள் செயல்பட்டதாகவும் தெரி வித்தார். இச்சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த  அனைவரும் வீடு திரும்பியுள்ளதாகவும், ஒருவர்  மட்டும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் கூறி னார். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41  என்று உறுதிப்படுத்திய முதலமைச்சர், இதில் ஆண்கள் 13 பேர், பெண்கள் 18 பேர், குழந்தை கள் 10 பேர் என்று விவரங்களை தெரிவித்தார். 24 மருத்துவர்கள் மூலம் இரவிலேயே உடற்கூராய்வு கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்த அனைத்து உடல்களையும் குளிர்சாதன பெட்டியில் வைப்ப தற்கு போதிய வசதி இல்லாததே இரவில் உடற்கூ ராய்வு செய்ய வேண்டிய நிலைக்கான முக்கிய கார ணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவு படுத்தினார். கரூர் ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பெற்றே இரவில் உடற்கூராய்வு மேற்கொள்ளப் பட்டதாகவும் கூறினார். 24 மருத்துவர்கள் மற்றும் 14 மருத்துவ பணி யாளர்களைக் கொண்டு இரவில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் விளக்கி னார். உடல்கள் அழுகிவிடக்கூடாது என்பதற்காக வும், இறந்தவர்களின் உறவினர்களின் மன நிலையை கருத்தில் கொண்டும் இரவிலேயே  உடற்கூராய்வு செய்வது முடிவு செய்யப்பட்ட தாகவும் தெரிவித்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சி களின் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி வருவதாகவும், இனி மேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல்  தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படு வதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார்.  கூட்டம் நடத்தும் கட்சிகள் பொறுப்போடு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.