tamilnadu

img

அமர் ஜவான் ஜோதியை அணைத்தது மோடி அரசு

புதுதில்லி, ஜன.21-  தலைநகர் தில்லியில் இந்தியா கேட்டில் கடந்த 50 ஆண்டுகளாக ஒளிர்ந்து வந்த  அமர் ஜவான் ஜோதியை அணைத்து விட்டு, அதனை தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஜோதியுடன் இணைத்துள்ளது மோடி அரசு. இந்தியா கேட், சர் எட்வின் லூட்டி யன்ஸ் வடிவமைத்தது. கடந்த 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி இர்வின்  பிரபுவால் இது திறந்து வைக்கப்பட்டது. 1914 முதல் 1921 வரை முதல் உலகப் போரில் வீர மரணம் அடைந்த சுமார் 70,000 வீரர்களை நினைவு கூரும் வகையில் இந்தியா கேட் அமைக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு வங்கதேசத்தை விடு விப்பதற்காக  நடைபெற்ற போரில் உயிரி ழந்த  ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களை  கௌரவிப்பதற்காக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் அமர் ஜவான் ஜோதி கட்டப்பட்டது. இந்திராகாந்தி 1972- ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி, இந்திய நுழைவாயிலில் அமர் ஜவான் ஜோதியைத் திறந்து வைத்தார்.

அமர்ஜவான் ஜோதி அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளைக்  கொண்டாடிய நிலையில்,  ஒன்றிய மோடி அரசு அமர் ஜவான் ஜோதியை வெள்ளியன்று அணைத்தது.  இதற்குப் பதிலாக புதிதாக உரு வாக்கப்பட்டுள்ள தேசிய போர் நினை விடத்தில் அந்த ஜோதி ஏற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போர் நினைவிடமானது, 2019 ஆம் ஆண்டு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலேயே சி ஹெக்ஸகன் பகுதியில் அமைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தில் சுதந்திரத்துக்குப் பின்னர் உயிர்நீத்த வீரர்கள் 22,942  பெயர்  பொறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குடியரசு தின விழாவின் போதே எப்போதும் அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தும் மரபை மாற்றிய பிரத மர் நரேந்திர மோடி புதிதாக அமைக்கப் பட்டுள்ள தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் இந்தாண்டு குடியரசு தின விழாவிற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள சூழலில்  அமர் ஜவான் ஜோதி வெள்ளிக்கிழமை அணைக்கப்பட் டது.  இரண்டு ஜோதிகளையும் பராமரிப்பது கடினமாக இருப்பதால் ஒன்றாக இணைப்ப தாக  ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், இது பற்றி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘போர் வீரர்களுக்காக ஏற்றப்பட்ட அமர்ஜவான் ஜோதி வெள்ளி யன்று அணைக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. சிலரால் தேசப்பற்றையும் தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியாது. நமது வீரர்களுக்காக மீண்டும் அமர்ஜவான் ஜோதியை ஏற்றுவோம்’’ என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

;