tamilnadu

img

ரேசன் கடைகளில் மோடி முத்திரை ஒன்றிய அரசின் தேர்தல் பிரச்சாரமே!

திருவனந்தபுரம், பிப்.12- ரேசன் கடையில் மோடி முத்திரை, மையத்தின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி எனவும் ஒன்றிய அரசின் நடவடிக்கை சரியல்ல, இதை செயல்படுத்துவது கடினம் என்றும் சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரளா நீண்டகாலமாக ரேசன் முறையை கடைப் பிடிக்கும் மாநிலம். அதன் ஒரு பகுதியாக ரேசன் கடைகளும் உள்ளன. ஆனால் இதுவரை கண்டிராத புதிய பிரச்சார திட்டத்தை ஒன்றிய அரசு முன்மொழி ந்துள்ளது. இது நடைபெற உள்ள மக்களவைத் தேர்த லுக்கான பிரச்சாரமாகவே பார்க்க முடியும். இது சரி யல்ல, இதை செயல்படுத்துவது கடினம் என்பதை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார். இது குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் முதல்வர் கூறினார்.