சென்னை,பிப்.2- தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்து வமனையில் முதல் நாளில் நடைபெற்ற சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வில் 73 பேர் கல்லூரியில் சேருவதற்கான உத்தரவுகளை பெற்றனர். அதைத்தொடர்ந்து, 28 ஆம் தேதி நடந்த அரசுப்பள்ளி மாணவர்களுக் கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டுக் கான கலந்தாய்வில் 541 பேருக்கு அனு மதி ஆணை வழங்கப்பட்டது. இந்த இரண்டு கலந்தாய்வும் நேரடியாக நடத்தப்பட்டன. பொதுப்பிரிவு கலந்தாய்வில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்பதால் ஆன்லைன் வழியாக கலந் தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொது கலந்தாய்வை ஆன் லைனில் கடந்த 30 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்க ளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவு கள் வெளியாகாததால் தமிழகத்தில் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப் பட்டது. அதன்படி பொது கலந்தாய்வு இணையதளம் வழியாக பிப்.2 அன்று தொடங்கியது.
முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க 9,894 பேர் பதிவு செய்து உள்ளனர். 10,461 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 7 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 15 ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணைய தளங்களில் வெளி யிடப்படும். 16 ஆம் தேதி கல்லூரிக ளில் சேருவதற்கான ஆணையை இணையதளத்தில் இருந்து பதிவிறக் கம் செய்து கொள்ளலாம். 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் கிடைக்கின்ற மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 4,319. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 324 இடங்கள் போக மீதமுள்ள 3,995 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதேபோல சுயநிதி மருத்துவ கல்லூரி களில் உள்ள 1,503 எம்.பி.பி.எஸ். இடங்களில் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு 113 இடங்கள் போக மீதமுள்ள 1,390 இடங்கள் நிரப்பப்படுகிறது. அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 157 இடங்களுக்கும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,166 இடங்க ளுக்கும் தற்போது கலந்தாய்வு நடை பெறுகிறது. மருத்துவ கலந்தாய்வு முதன் முதலாக ஆன்லைன் வழியாக இந்த ஆண்டு நடத்தப்படுவது குறிப்பிட த்தக்கது.