tamilnadu

img

மே 30 திருச்சியில் தொழிலாளர் சங்கமம்

திருச்சிராப்பள்ளி, மே 26 - தொழிலாளர் வர்க்கத்தின் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு  தமிழகத்தின் ஏழு முனைகளி லிருந்து மே 20 அன்று நடைபயணம் துவங்கி, 7 நாட்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது. பத்து நாட்கள் 2,100 கி.மீ பயணம் செய்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சந்திக்கும் நடைபயணக்குழுக்கள்  மே 30 அன்று திருச்சிராப்பள்ளியில் சங்கமிக்கின்றன.  புத்தூர் நால்ரோடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்  சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென், மாநிலத்தலைவர் ஏ.சவுந்தரராசன்,  மாநிலபொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.  இப்பொதுக்கூட்டத்திற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வியாழனன்று சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற தயாரிப்புக் கூட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க மாவட்டச் செயலா ளர் செல்வி, சிவக்குமார், மணிமாறன், லெனின், எஸ்.கே.செல்வராஜ், சந்திர சேகர் ஆட்டோ சங்க மாவட்டப் பொதுச்செயலாளர் மணிமாறன்  உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 இந்தக் கூட்டத்தில் பேசிய ஜி.சுகுமாறன், “இந்தியாவில் உள்ள  தொழிலாளர்களை ஒன்றுப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக தமிழகத்தில் சிஐடியு மேற்கொண்டுள்ள நடை பயணம் நாட்டில் மாற்றத்தை உரு வாக்கும்.  விலைவாசி உயர்வு, வேலை யின்மை போன்ற பிரச்சனை களிலிருந்து மக்களை பாஜக திசை திருப்பி வருகிறது. உணவு, உடை, சாதி, மதம் என அனைத்தின் மூலமும் மக்களிடையே பிளவை உருவாக்க முயற்சிக்கிறது பாஜக.  தொழிலாளர்களின் ஒற்றுமை தான் இன்றைய தேசத்தின் தேவை என்பதை 2024-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் நிரூபிக்கும்” என்றார். இந்தக்கூட்டத்தில் நடைபயண பேரணி-நிறைவு பொதுக்கூட்டத்திற்கு போக்குவரத்துத் தொழிலாளர்கள் நிதியளித்தனர். நிதியை மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பெற்றுக்கொண்டார்.