tamilnadu

img

கிருஸ்துமஸ் கொண்டாடிய மாதர் சங்கத்தினர்

விழுப்புரம்,டிச.25- விழுப்புரம் பெரியார் நகர் அருகே சாலமேடு பகுதியில் உள்ள திருச்சபையில் நடந்த கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.நீலா தலைமையில் கலந்து கொண்டு கிருத்துவ மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எஸ்.சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.