tamilnadu

img

ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பிய மணிமுத்தாறு அணை

 திருநெல்வேலி. டிச. 9- இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகளவு தமிழகத்தில் பெய்தது. அதன் விளை வாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த  நிலையில் புதனன்று மாவட்டத்தின் எந்த பகுதிகளிலும் மழை பெய்ய வில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் மழை பெய்யாவிட்டாலும் அணை களுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. பாபநாசம் அணைக்கு  வினாடிக்கு 1,243 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 1,005 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

பாபநாசம் அணை நீர்மட்டம் 137.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148.10 அடியாக உள்ளது. இதுபோல கடனாநதி, ராம நதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயி னார், கொடுமுடியாறு, வடக்கு பச்சை யாறு, நம்பியாறு அணைகளுக்கும் தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. இந்த அணைகளும் ஏற்கனவே நிரம்பியதால், அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் மணிமுத்தாறு அணைக்கு மட்டும் தென் மேற்கு பருவ மழையின்போது குறைந்த அளவே தண்ணீர் வரும். மற்ற 10 அணைகளுக் கும் தென்மேற்கு பருவமழையின் போதும் கூடுதல் தண்ணீர் வரும்.இந்த ஆண்டு பாபநாசம், சேர்வலாறு உள்பட 10 அணைகளும் ஏற்கனவே தென்மேற்கு பருவமழையின்போதும் நிரம்பின. தற்போது வடகிழக்கு பருவ மழையின்போதும் இந்த அணைகள் நிரம்பி உள்ளன. 

வழக்கமாக இந்த 10 அணைகளும் ஒரே ஆண்டில் 2 முறை நிரம்புவது வழக்கம். ஆனால் மணிமுத்தாறு அணைக்கு தென்மேற்கு பருவமழை யின்போது போதிய தண்ணீர் வராத தால், வடகிழக்கு பருவமழையின் போது மட்டும் இதுவரை ஆண்டுக்கு ஒருமுறையே நிரம்பும். கடந்த ஆண்டு  வடகிழக்கு பருவமழை முடிந்து ஜனவரி மாதம் கனமழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அணை ஜனவரி மாதம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இந்த நிலையில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழையின்போது அதிக மழை காரணமாக டிசம்பர் மாதமே மணிமுத்தாறு அணை நிரம்பியது. மணிமுத்தாறு அணை முழு கொள்ள ளவான 118 அடியை எட்டி நிரம்பியதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மணிமுத் தாறு அணை இந்த ஆண்டு ஜனவரி மாதமும், டிசம்பர் மாதமும் என ஒரே ஆண்டில் 2 முறை நிரம்பியது விவ சாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து கால்வாய்களில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும், ஆற்றில் 1000  கன அடி தண்ணீரும் திறந்து விடப்படு கிறது. அணைக்கு வினாடிக்கு 646  கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் வியாழக்கிழமை 117.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து உள்ளதால், அணையில் இருந்து தொடர்ந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.