இராமநாதபுரம், செப்.11- தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இம்மானுவேல் சேகர னுக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந் தனர். மேலும் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண் பாட்டுக் கழகம், இம்மானு வேல் சேகரனின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி, பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தினர். இந்நிலையில், தியாகி இம்மானுவேல் சேகரனின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில், அவ ரது பிறந்தநாள் நூற்றாண்டி னையொட்டி, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பரமக் குடி நகராட்சிக்கு சொந்த மான இடத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உரு வச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அரசின் சார்பில் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.