tamilnadu

img

சிபிஎம் எம்எல்ஏ சின்னத்துரையிடம் மணக்குடி மக்கள் கோரிக்கை

சிபிஎம் எம்எல்ஏ சின்னத்துரையிடம் மணக்குடி மக்கள் கோரிக்கை

மவாசிகளின் சுடுகாடு மற்றும்  பயிர் செய்த நிலங்களை டால்மியா  சிமெண்ட் நிறுவனம் கையகப்படுத்தி யிருப்பது சம்பந்தமாக கந்தர்வ கோட்டை எம்எல்ஏவிடம் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை அரியலூருக்கு வருகை தந்தபோது, மணக்குடி கிராமவாசிகளின் சுடுகாடு பிரச்சனை மற்றும் அவர்கள் பயிர் செய்த ஏழரை ஏக்கர் நிலத்தை அடா வடியாக டால்மியா சிமெண்ட் நிறு வனம் கையகப்படுத்தி வைத்திருப்பது சம்பந்தமாக மனு ஒன்றை அளித்த னர். மனுவைப் பெற்றுக் கொண்ட கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராம  மக்களிடம் உறுதியளித்தார். உடன் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.  இளங்கோவன், செயற்குழு உறுப்பி னர்கள் ஆர். மணிவேல், பி. துரைசாமி,  மாவட்டக் குழு உறுப்பினர் மலர் கொடி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகி சிற்றம்பலம், அரியலூர்  ஒன்றிய செயலாளர் அருண்பாண்டி யன், ஒன்றியக் குழு உறுப்பினர் தன லெட்சுமி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.