திருவனந்தபுரம் கரமனை தளியில் பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா நாயர் (36). இவர் பிரபல நடிகை ஆவார். மேக தீர்த்தம், முத்துகவு, அச்சாயன்ஸ், கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல், கல்கி உள்பட மலையாளப் படங்களிலும், ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இந்தநிலையில் வியாழனன்று இரவு திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். பின்னர் உடனடியாக திருவனந்த புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அபர்ணா நாயர் இறந்து விட்டதாக கூறி னர். இதுகுறித்து கரமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.