tamilnadu

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

கூடங்குளத்தில் இன்று மின்தடை

திருநெல்வேலி, ஜன.17- நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட கூடங்குளம், சங்கனாங்குளம், நவலடி ஆகிய துணை  மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கி ழமை (ஜன.18) நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கூடங்கு ளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்கு ளம், விஜயா பதி, திருவம்பலாபுரம், ராமன்குடி, நவலடி, ஆற்ற ங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்கு ளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளி குமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்ப னை, குட்டம், பெட்டைக்குளம், உறுமன்குளம், மன்னார்புரம்,  வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்ட மொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏறாந்தை, சிவந்தியாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சனிக்கிழமை (ஜன.18) அன்று  காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை  செய்யப்படுகிறது என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் ராஜன்ராஜ் தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் ஒருவர் பலி நண்பர்கள் 5 பேர் படுகாயம்

தூத்துக்குடி, ஜன.17-  தூத்துக்குடி அய்யலு நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (38), தனியார் ஷிப்பிங் நிறுவன ஊழியர். இவர் வியா ழனன்று தனது நண்பர்கள் 5 பேருடன் காரில் மூணாறுக்கு சென்றுள்ளார். காரை இவரது நண்பரான சென்னையைச் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த கார் மூணாறு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில், தேனி அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, உசிலம்பட்டி, தேனி அரசு  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த ராஜாவுக்கு மனைவியும் 3 குழந்தை களும் உள்ளனர். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுக்கடையில் திருட்டு

தூத்துக்குடி, ஜன.17- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தேரியூர்  வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (37). இவர் உடன்குடியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். வியாழ னன்று விடுமுறை நாளில் பாரின் பூட்டை உடைத்து அங்கி ருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள னர். இதுகுறித்து குலசேகரபட்டணம் காவல் நிலையத்தில் மதன்ராஜ் செய்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி  உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த செளந்தர் (21), ஈஸ்வர  மூர்த்தி (22), யாக்கோப் ராஜ் (22) ஆகிய 3 பேரையும் போலீசார்  கைது செய்தனர். 

போக்சோவில் முதியவர் கைது

கோவில்பட்டி, ஜன.17- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தெற்கு புதுக்கிரா மம் நாராயணகுரு நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (63). 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் கோவில்பட்டி அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் செய்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்தி பரமேஸ்வரனை கைது செய்தார்.  அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக மது விற்பனை: 59 பேர் கைது: எஸ்.பி. தகவல்

தூத்துக்குடி, ஜன.17- தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோ தமாக மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்ட தாக 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1935  மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வியாழனன்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தவர்கள், விற்பனை செய்வ தற்காக வைத்திருந்தவர்கள், கடத்திய வர்கள் என மாவட்டத்தில் உள்ள அனைத்து  காவல் நிலையங்களிலும் நடவடிக்கை எடுக்க ப்பட்டு தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 13  பேர் கைது செய்யப்பட்டு 1021 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருவைகுண்டம் உட்கோட்டத்தில் 9 பேர்  கைது செய்யப்பட்டு 213 மது பாட்டில்களும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 5 பேர் கைது  செய்யப்பட்டு 184 மது பாட்டில்களும், தூத்துக்குடி நகர் உட்கோட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு 87 மது பாட்டில்களும், சாத்தா ன்குளம் உட்கோட்டத்தில் 3 பேர் கைது செய்ய ப்பட்டு 74 மது பாட்டில்களும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு  50 மது பாட்டில்களும், விளாத்திகுளம் உட்கோ ட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு 42 மது  பாட்டில்களும், மணியாச்சி உட்கோட்டத்தில் 3  பேர் கைது செய்யப்பட்டு 23 மது பாட்டில்க ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மதுவிலக்குப்பிரிவில் 5 பேர்  கைது செய்யப்பட்டு 48 மது பாட்டில்களும், கோவில்பட்டி மதுவிலக்குப் பிரிவில் 5 பேர்  கைது செய்யப்பட்டு 193 மது பாட்டில்களும் பறி முதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது. இதுபோன்று சட்டவிரோதமாக மதுபா னங்கள் விற்பனை செய்தல், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தல், வைத்திருப்பவர்கள், கடத்துபவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறை அவசர தொலைபேசி எண் 100 மற்றும் அலைபேசி எண் 95141 44100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அருண் பாலகோபாலன் தெரி வித்துள்ளார்.

சுகாதாரமாக பிரசாதம் தயாரிக்கும்  நெல்லையப்பர் கோவிலுக்கு சான்றிதழ்

திருநெல்வேலி, ஜன.17- நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலுக்கு தமிழகத்தில் சுகாதா ரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவிலாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணய சான்றிதழ் வழங்க ப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்து றையின் கீழ் ஏராளமான கோவில்கள் செயல்ப ட்டு வருகின்றன. இந்நிலையில் பிரசித்தி பெற்ற திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவி லுக்கு தமிழகத்தில் சுகாதாரமான முறையில்  பிரசாதம் தயாரிக்கும் கோவிலாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்க ரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவி லுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகை கேசவன்புத்தன்துறை மீனவக்  கிராமத்தில் விழாக் கோலம்

நாகர்கோவில், ஜன.17- தமிழர் பண்டிகையான பொங்கலை குமரி மாவ ட்டத்தில் சாதி,மத பாகுபாடி ன்றி அனைத்து தரப்பு மக்க ளும் கொண்டாடினர். நாகர்கோவில் அருகே கேசவன்புத்தன்துறை மீன வக் கிராமத்தினை சார்ந்த  கிறித்தவ மக்கள் பொங்கல்  திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் கொடி யேற்றி உழவர்களுக்கு மரி யாதை செலுத்தும் வகையில்  ஆலயங்களில் சிறப்பு பிரா ர்த்தனை செய்தனர். மேலும், பல்வேறு விளையாட்டு  போ ட்டிகள் நடத்தி பொங்கல் விழாவை கொண்டாடினர். வெள்ளியன்று கடலில் நீச்சல் போட்டிகள் மற்றும் கட்டுமர போட்டிகள் நடை பெற்றன. இதில்  ஏராளமான  மீனவ மக்கள் உற்சாகத்து டன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி னர். 50- க்கும் மேற்பட்ட  வீரர்கள் கலந்து கொண்ட நீச்சல் போட்டியில் முதல் மற்றும் மூன்றாவது இட ங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பதி னைந்துக்கு மேற்பட்ட கட்டு மரங்கள் கலந்துகொண்ட படகு போட்டியில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டன. பொங்கல் பண்டிகையினை சிறப்பி க்கும் வகையில் அந்த மீனவ கிராமம் விழா கோலம் பூண்டி ருந்தது.   இதுபோன்று செண்பக ராமன்புதூர் இலந்தை இளைஞர் இயக்கம் சார்பில்  28வது ஆண்டு பொங்கல் விழா மற்றும், மாட்டு வண்டி போட்டி நடந்தது. தட்டு வண்டி, வில் வண்டி என்று 2  பிரிவுகளாக போட்டிகள் நட த்தப்பட்டன. தட்டு வண்டி  போட்டியில் 24 தட்டு வண்டி களும், வில் வண்டி போட்டி யில் 7 வில் வண்டிகள் போட்டி யில் பங்கேற்றன. இந்த போ ட்டிகள் ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் சாலை யில் நடைபெற்றது.

;