tamilnadu

img

டைக்வோண்டோவில் கின்னஸ் உலக சாதனை படைத்த மதுரை தம்பதி

தற்காப்புக் கலையான டேக்வோண்டோவில் மதுரையை சேர்ந்து தம்பதி, புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

மதுரையில், டேக்வாண்டோ அகாடமி பயிற்சியாளர்கள் நாராயணன் மற்றும் அவரின் மனைவி ஸ்ருதி இருவரும் இணைந்து டேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையில், ஒரு நிமிடத்தில் 154 கிக் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். டேக்வோண்டோவின் முந்தைய சாதனையாக 150 கிக் இருந்து உள்ளது. இதுதவிர, இதுவரை நாராயணன் பதினைந்து கின்னஸ் உலக சாதனைகளும் ஸ்ருதி இரண்டு கின்னஸ் உலக சாதனைகளும் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.