tamilnadu

img

“யூடியூப்பை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை”

யூடியூப்பை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.  

உலகம் முழுவதும் யூடியூப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேர காணொளியை பார்க்கிறார்கள். யூடியூபர்கள் என பிரபலமாக குறிப்பிடப்படும் யூடியூப் உள்ளடக்க படைப்பாளர்கள் நிமிடத்திற்கு 100 மணி நேர உள்ளடக்கத்தை பதிவேற்றுகிறார்கள். அதில் சிலர் தவறான முறைக்கும் பயன்படுத்துகின்றனர்.  

அந்தவகையில் முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து யூடியூப்பில் அவதூறு பரப்பியதாக சாட்டை துரைமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் மீண்டும் யூடியூப்பில் அதே போன்று அவதூறு பரப்பியதாகவும், அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.  

இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி தெரிவிக்கையில், இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக தற்போது செய்தி வெளியாகி உள்ளது. யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர் என்றும் கூறினார். இதனை தடுத்து நிறுத்தும் வகையில் யூடியூப்பை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.  

மேலும் யூடியூப்பில் தேவையற்ற பதிவுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? நீதிமன்றத்திற்கு உதவுவதற்கு நியமனம் செய்த வழக்கறிஞர் யூடியூப் குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.  

அதனைதொடர்ந்து சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கை மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

;