ஆட்டோ ஸ்டான்டுகளை அகற்றும் காவல்துறைக்கு சிஐடியு எதிர்ப்பு
மதுரை , ஜூன் 5- சிஐடியு ஆட்டோ சங்க மதுரை மாவட்ட தலைவர் இரா-தெய்வராஜ், பொதுச் செயலாளர் என்.கனகவேல் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாடுமுழுவதும் கொரனாதொற்றுநோய்பரவலால் மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. கடந்த 60 நாட்களாக அனைத்து மக்களின்வாழ்வாதாரம் முடங்கிபோய்விட்டது, இந்நிலையில் தமிழக அரசு பலகட்டங்களாக ஊரடங்கை தளர்த்தி, அறிவித்தநிலையில் கடந்த 23/5/2020 ம்தேதி முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளித்தது. இந்நிலையில் மிகவும் வறுமையில் வாடிவரும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோக்களை இயக்க முயற்சிக்கும் போது விளக்குத்தூண் பகுதி போக்குவரத்து ஆய்வாளர் பல ஆட்டோ ஸ்டாண்ட்டுகளுக்கு சென்று ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது எனவும் மீறினால் ரூ2500/அபராதம் விதிப்பேன் எனக் கூறி விரட்டிவிடும் நடவடிக்கையை மேற்கொள்கிறார். எனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற ஆட்டோ தொழிலாளர்களை மேலும் மோசமானநிலைக்கு தள்ளிவிடுவதை மேற்படிபோக்குவரத்து ஆய்வாளர் கைவிட வேண்டும். மாநகர் காவல்துறை ஆணையாளர் தலையிட்டு ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
விருதுநகர் : கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 156 ஆக உயர்வு
விருதுநகர், ஜூன்.5 விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகரில் கருப்பசாமி நகரை சேர்ந்த 14 வயது பள்ளிச் சிறுமி மற்றும் அவரது சகோதரர், அல்லம்பட்டியை சேர்ந்த 31 வயது வாலிபர், புல்லலக்கோட்டையை சேர்ந்த 31வயது பெண்,சென்னையிலிருந்து சிவகாசி ருகே உள்ள ஈஞ்சார் கிராமத்திற்கு வந்த கணவன் மனைவி மற்றும் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கிராமத்திற்கு வந்த பெண் என மாத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்தது.
போராட்டங்களில் பங்கேற்று கைதான பெண்ணின் காவலர் பணி ஆணை ரத்து
தேனி, ஜூன் 5- அரசுக்கு எதிரான போராட்டங்க ளில் பங்கேற்று கைதான தகவலை மறைத்து பணியில் சேர்ந்த கம்பத்தைச் சேர்ந்த பெண்ணின் காவலர் பணி ஆணையை, தமிழக காவல்துறை தலை வர் ரத்து செய்து உத்தரவிட்டார் . நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பிரேமா (28). இவருக்கு 2 குழந்தைகள் உள்ள னர். இந்த நிலையில், பிரேமா சில மாதங்களுக்கு முன்பு காவலர் தேர்வா ணையம் மூலம் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தேனி மாவட்ட காவலர் பயிற்சி நிலையத்தில் 15 நாள்கள் வரை பயிற்சி பெற்றற பிரேமா, தற்போது திருச்சி மாவட்ட காவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில், பிரேமா அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று கைதானதாக காவல் துறை நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் துறை நடத்திய விசாரணையில், அரசு மதுபானக் கடை களுக்கு எதிராகவும், கேரள முதல்வர் மற்றும் அமைச்சரின் தேனி மாவட்ட வருகையைக் கண்டித்தும் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் சார்பில் பங்கேற்று கைதானவர் என்பதும், இந்த வழக்கு களில் தனது பெயரை கலைமணி என்று கூறி காவல் நிலையங்களில் பதிவு செய்திருந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட காவல் துறை நிர்வாகம், தமிழக காவல் துறை நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று கைதான தகவலைத் தெரிவிக்காமல் மறைத்து பணியில் சேர்ந்ததற்காகவும், காவல் காவல் நிலைய வழக்குகளில் தனது பெயரை மறைத்து போலியான பெயரை பதிவு செய்ததற்காகவும் பிரே மாவின் பணி ஆணையை, தமிழக காவல் துறை நிர்வாகம் வியாழக் கிழமை ரத்து செய்தது.
கொரோனா தொற்று எண்ணிக்கை தேனியில் 120 ஐ தொட்டது
தேனி, ஜூன்.5- தேனி மாவட்டத்தில் சென்னை யிலிருந்து வந்த இருவர் உள்பட மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது . தேனி மாவட்டத்தில் வியாழனன்று சென்னையிலிருந்து வந்த குச்சனூர் அருகே துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர், ஆண்டி பட்டி அருகே கோத்தலூத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு குடலிறக்க நோய்க்கு சிகிச்சை பெற வந்த கொண்டம நாயக் கன்பட்டியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் என மொத்தம் 3 பேருக்குகொ ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இதையடுத்து, மாவட்டத்தில் கொரோனா வால்பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் குணமடைந்தனர்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருப வர்களில், ஆண்டிபட்டி அருகே கண்ட மனூரைச் சேர்ந்த இளைஞர், போடி-ஜக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளைஞர் என மொத்தம் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 பேர், கம்பம் அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை என மொத்தம் 17 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா நிவாரணம் கோரி ஜுன் 9-ல் இடதுசாரி கட்சிகள் போராட்டம்
திண்டுக்கல், ஜுன்.5 கொரானா பாதிப்பு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி திண்டுக்கல்லில் இடதுசாரிக் கட்சிகள் சார்பாக ஜுன் 9ம் தேதி போராட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூ.7500ம், மாநில அரசு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். ஊரடங்கு காரணமாக சாகுபடி இழப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும். சிறுகுறு நடுத்தர தொழில் புரிவோருக்கு நிபந்தனையின்றி ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன்களுக்கு 6 மாத கால வட்டித்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தி கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் புதனன்று தயாரிப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், சிபிஐ மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்டப் பொருளாளர் ராஜாங்கம், சிபிஐ எம்எல் விடுதலை அமைப்பின் மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. (நநி)
ஜூன் 9ல் இடதுசாரி கட்சிகள் சார்பில் 150 இடங்களில் கண்டன இயக்கம்
விருதுநகர், ஜூன்,4- பொது முடக்கத்தால் பாதிக் கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களு க்கு மத்திய, மாநில அரசுகள் நிவார ணத் தொகை வழங்க கோரி இடதுசாரி கட்சிகள் வரும் ஜூன்.,9 ல் விருதுநகர் மாவட்டம் முழுவதும் 150 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஜூன் 4 ல் நடைபெற்றது. இதில், சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பி னர் டி.ராமசாமி, மாவட்ட செயலாளர் பி.லிங்கம், சிபிஎம் மாவட்ட செய லாளர் கே.அர்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் , கொரோனா கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.7500ம், மாநில அரசு ரூ.5000 ம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். பேரூராட்சிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இரண்டரை மாத பொது முடக்கம் காரணமாக விவசாய விளை பொருட்கள் விற்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே,விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சிறு, குறு தொழில் முனைவோருக்கு நிபந்தனையின்றி ரூ.10லட்சம் வங்கிக் கடன் வழங்க வேண்டும். மாநில அரசுக்கு மத்திய அரசு பேரிடர் கால நிவாரண நிதி வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டதை ரத்து செய்ய வேண்டும். இலவச மின்சாரம் தொடர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து வரும் ஜூன்.9ல் காலை விருதுநகர் மாவட்டம் முழுவதும் 150 இடங்களில் கண்டன இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.