இராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்
மதுரை, ஜன.5- மானாமதுரை ரயில் நிலையத்தில் மின்சார இன்ஜினிலிருந்து டீசல் இன்ஜின் மாற்றுவதற்காக இராமேஸ்வரம் - ஓகா - இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களி லிருந்து புறப்படும் நேரத்தில் சிறிய மாற் றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி -11 அன்று ஓகாவில் இருந்து புறப்படும் வண்டி எண் 16734 இராமேஸ் வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் மற் றும் மதுரை ரயில் நிலையங்களிலிருந்து மதியம் 2.50 மற்றும் 3.50 மணிக்கு புறப் படுவதற்கு பதிலாக மதியம் 2.35 மற்றும் 3.25 மணிக்கு புறப்படும். இதேபோல் ஜனவரி - 14 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் வண்டி எண் - 16733 இராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலை யத்திலிருந்து நள்ளிரவு 2.45 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்படும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறைவாசி உயிரிழப்பு
மதுரை, ஜன. 6- மதுரை சிறைச்சாலையிலிருந்த சிறை வாசி நெஞ்சுவலியால் உயிரிழந்தார். மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (39) இவர் மனைவி சுந்தரவள்ளி இருவரும் ஊசி பாசிகள் விற்பனை செய்து வந்தனர். இந்த நிலை யில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெரியார் பேருந்து நிலையம் அருகில் இரு வரும் ஊசி, பாசிகள் விற்பனை செய்த போது அந்தப் பகுதியில் சென்ற கோபால கிருஷ்ணன் என்பவர் பாலமுருகன் மனைவி சுந்தரவள்ளி மீது இடித்து விட்ட தாகக் கூறி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து பாலமுரு கன் கோபாலகிருஷ்ணனை அடித்ததில் சம்பவ இடத்திலேயே கோபாலகிருஷ் ணன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திலகர் திடல் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையிலி ருந்து பாலமுருகனுக்கு புதனன்று அதி காலை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந் தார்.
குமுளி மலைச் சாலையில் லாரி கவிழ்ந்தது
கம்பம், ஜன.5- தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் எம்-சாண்ட் கொண்டு சென்ற டிப்பர் லாரி தலைகுப்புற கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி, அம்பலகாரர் தெருவைச் சேர்ந்தவர் மகா ராஜா மகன் பாண்டியன் இவர் டிப்பர் லாரி ஓட்டுநராக உள்ளார். இவர் புதனன்று டிப்பர் லாரியில் எம்.சாண்ட் எனப்படும் மணல் ஏற்றிக்கொண்டு லோயர்கேம்ப் வழியாக குமுளி நோக்கி சென்றார். அப்போது சுரங்கனாறு வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவு மலைச் சாலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுந ரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் பாண்டியன் பலத்த காயமடைந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் குமுளி காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தி காயம்பட்ட பாண்டியனை கம்பம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு எம்-சாண்ட் கொண்டு செல்லப்பட்டதால், அதற்கு அனுமதி உள்ளதா என்று வரு வாய்த்துறை மூலம் பரிசீலித்து வருகின்றனர்.
நிலுவையில் உள்ள தொகையினை செலுத்தாத கேபிள் ஆப்ரேட்டர்கள் மீது நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
மதுரை, ஜன.5- மதுரை மாவட்டத்தில் அனலாக் தொகையினை நிலுவையாக வைத் துள்ள உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் பணம் செலுத்த தவறினால் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக் கப்படும் மதுரை மாவட்ட ஆட்சியர் அறி வித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 178 எல்சிஓ-க்கள் அனலாக் தொகையினை நிலுவையாக வைத்துள்ளனர். நிலுவைத் தொகையினை செலுத்த அவர்களுக்கு இரு முறை குறிப்பாணை அனுப்பப் பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை பாக்கி தொகையினை செலுத்தாத எல்.சி.ஓ-க்கள் ஜனவரி 25 ஆம் தேதிக்குள் அரசு கணக்கில் நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டும். பாக்கித் தொகை யினை செலுத்தத் தவறினால் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்ய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு லட்சக்கணக்கில் வாடகை கேட்டு நோட்டீஸ் மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை
தேனி, ஜன.5- கம்பம், கம்பராயர், ஆண்டிபட்டி மீனாட்சியம்மன் ஆகிய கோவிலுக்குச் சொந்தமான அடிமனை நிலங்களில் குடியிருப்போர் பல லட்சம் ரூபாய் கூடுதல் வாடகை கட்ட வேண்டும் இல்லாவிட்டால் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் மிரட்டல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் என தேனி ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் டி.கண்ணன்,தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரனை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- கம்பம், கம்பராயர் கோவில், ஆண்டிபட்டி மீனாட்சியம்மன் கோயில் ஆகியவற்றிக்கு சொந்தமான அடி மனையிடத்தில் பல தரைமுறையாக வீடு, கடைகள் கட்டிக் குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குடியிருப்பவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கூடுதல் வாடகை கேட்டு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் சீல் வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் இந்து சமய அறநிலைய துறை அமைச்சரைச் சந்தித்தபோது வாடகைக் குறைப்புக்கு தலைமைச் செயலாளர் தலைமையில் பத்து துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்புடன் உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து வாடகை தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் இணை ஆணையர், பயன்படுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெறவும், உயர்மட்டக்குழு அறிவிப்பு வரும் வரை பழைய வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதில் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிகள் பதுக்கலா? திண்டுக்கல் மலையடிவாரங்களில் சோதனை
திண்டுக்கல், ஜன.5- திண்டுக்கல்லில் மீன்பிடி குத்தகை ஏலம் எடுத்ததில் ஏற் பட்ட முன்விரோதம் காரணமாக ராகேஷ்குமார் என்ற 26 வயது இளைஞர் நாட்டுத் துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், மலையடி வாரங்களில் வசிக்கக் கூடிய மக் கள் வனவிலங்குகளை விரட்ட வும், வேட்டையாடவும் நாட்டுத் துப்பாக்கிகளை வீட்டில் வைத்தே தயாரித்து, பயன்பாட்டில் வைத் திருக்கின்றனர் என்ற தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமலை, நத்தம், சாணார்பட்டி, தாலுகா காவல்நிலைய எல்லைக்குட் பட்ட பகுதிகளில் ஆகிய இடங்க ளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கல்வராயன் குளம், தவசிமடை, சாணார்பட்டி, நத்தம், வெள்ளோடு, சிறுமலை ஆகியப் பகுதிகளில் நாட்டுத் துப் பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த சேவியர், மூக்கன், சின்னழகு ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து இரண்டு ஏர்கன் மற்றும் எஸ்.பி.பி.எல் துப்பாக்கி 3 என மொத்தம் 5 துப்பாக்கிகள் மற்றும் கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை சாணார்பட்டி காவல்நிலையம் அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சீனிவாசன் கூறும்போது, ‘‘சிறுமலை, நத்தம், சாணார்பட்டி தாலுகா காவல்நிலைய எல்லை களில் இருக்கும் தனியாக வீடு கள், மலைப்பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கிகள், கள்ளத் துப்பாக்கி கள் பதுக்கி வைக்கப்பட்டி ருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது. இதில் 2 ஏர்கன் மற்றும் எஸ்.பி. பி.எல் என மொத்தம் 5 துப்பாக்கி கள் கைப்பற்றப்பட்டு, 3 குற்ற வாளிகள் கைது செய்யப்பட்டி ருக்கின்றனர். மேலும் வருவாய் துறையினருடன் இணைந்து மலைக்கிராம மக்களிடம் துப் பாக்கிகள் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அவர்கள் துப்பாக்கிகள் வைத்திருந்தால் தாமாக முன் வந்து போலீஸாரிடம் ஒப்படைக் குமாறு அறிவுறுத்தப்பட்டி ருக்கிறது. இதுபோல வேட்டைக் குப் பயன்படுத்தும் துப்பாக்கிகள் வைத்திருந்தால் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்’’ என் றார்.
பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு விவகாரம் சிபிசிஐடி விசாரணை துவங்கியது
தேனி, டிச.5- பெரியகுளம் வட்டத்தில் 182 ஏக்கர் அரசு நிலத்தை அதிமுக பிரமுகர், அதிகாரிகள் அபகரித்தது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் புதனன்று விசாரணையை துவக்கினர். பெரியகுளம் வட்டத்தில் அரசு நிலங் களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அதி முக பிரமுகர், அவரது உறவினர்கள், அதிகாரிகளின் உறவினர்கள், சோலார் கம்பெனி உரிமையாளர்கள் முறைகேடாக பட்டா பெற்று அபகரித்தனர். நிலம் அப கரித்தது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் தீக்கதிர் விரிவாக செய்தி வெளி யிட்டது. வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்கு வார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப் பட்டது தெரியவந்தது. இந்த நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரியகுளம் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனிநபர்கள் சிலர் அபகரித்து தங்களின் பெயரில் பட்டா பெற்றனர். இதற்கு உடந்தையாக இருந்த இரண்டு வட்டாட்சியர்கள் உட்பட ஏழு பேர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டனர். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப் பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்க ளாக மாற்றப்பட்டன. பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்த புகார்களின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய ஆனந்தி, ஜெயப்பிரிதா, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ண குமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவை யர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீர நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில்தாரின் உதவி யாளர் ராஜேஷ் கண்ணன், நிலத்தை அப கரித்த அன்னப்பிரகாஷ், முத்துவேல் பாண் டியன், போஸ் ஆகிய 14 பேர் உள்பட பலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை விசாரிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு ஆணை யிட்டார். அதைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை மாவட்டக்குற்றப்பிரிவு காவல் துறை அலுவலகத்திற்கு வந்த சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் சரவணன், குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் சுந்தராஜனிடம் வழக்குத் தொடர்பான ஆவ ணங்களை பெற்றுக்கொண்டார். புதன்கிழமை காலை சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் சரவணன் ,ஆய்வாளர் சித்ரா ஆகியோர் நில மோசடி தொடர்பாக புகார் மனுதாரரும், பெரியகுளம் சார் ஆட்சி யருமான ரிஷபை சந்தித்து விசாரணையை துவக்கினர். பின்னர் அபகரிக்கப்பட்ட நிலம், கனிமவளம் கொள்ளையடிக்கப்பட்ட நிலத் தையும் ஆய்வு செய்தனர்.
மாற்று இடம் கொடுக்காமல் வீடுகளை இடிக்கக் கூடாது; சிபிஎம் வலியுறுத்தல்
தேனி, ஜன.5- தேனியில் மதுரை நெடுஞ்சாலையில் குடியிருந்து வருபவர்களுக்கு மாற்று இடம் கொடுக்காமல் வீடுகளை அகற்றக் கூடாது என தேனி ஆட்சியரிடம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், தாலுகா செய லாளர் இ.தர்மர் ஆகியோர் தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரனைச் சந்தித்து மனு அளித்த னர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தேனியில் உள்ள மதுரை தேசிய நெடுஞ் சாலையில் 60 ஆண்டுகளாக மக்கள் குடி யிருந்து வருகிறார்கள். தற்போது குடி யிருப்புகளை காலி செய்து சாலையை விரி வாக்கம் செய்யவும், பாலம் கட்டவும் குடி யிருப்புகளை அப்புறப்படுத்த அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 1998- ஆம் ஆண்டு முதல் மாற்று இடம் கேட்டு கட்சியின் சார்பில் பல போராட்டங்கள் நடத்தியுள் ளோம். இதுவரை அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கவில்லை. நெரிசலைக் குறைக்க மேம்பாலம் கட்டுவதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கி ஏழை-எளிய மக்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்க உதவும்படி மனுவில் தெரிவித்துள்ளனர்.