தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கிறது மோடி அரசு சஞ்சய் ஜா குற்றச்சாட்டு
மதுரை, டிச.15- தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது எனஅகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் சஞ்சய் ஜா குற்றம்சாட்டினார். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பு மாநாட்டு மதுரையில் இரண்டு நாட்கள்நடை பெற்றது. சனிக்கிழமையன்று மாநாட்டில் கலந்துகொண்டு சஞ்சய் ஜா பேசியதாவது:- யுனைடெட் இந்தியா, நேஷனல், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைப்பதாக மத்திய அரசு அறி வித்து 22 மாதங்கள் கடந்த பின்னும் இன்னும் நடை முறைப்படுத்தவில்லை மத்திய அரசு தாமதமின்றி இணைப்பு நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். இணைப்பு நட வடிக்கையை உடனடியாக மேற்கொள்வதன் மூலம் பொதுத்துறை நிறுவனம் கூடுதல் பலத்துடன் பாலிசிதாரர் சேவையை மேம்படுத்த இயலும். மத்திய அரசு நிறுவனத்தை தனியார் மயமாக்க வழிவகுக்கும் பங்குவிற்பனை முயற்சியைக் கைவிட வேண்டும். தொழிற்சங்கச் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகிறது. பணிப் பாதுகாப்பும்கேள்விக்குறியாவ தோடு நிச்சயமற்ற தன்மையை மத்திய அரசு உருவாக்குகிறது. காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நிலம் சூழல் நாட்டில் தற்போது நிலவிவரும் பொரு ளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத் தும். 2020 ஜனவரி 8-ஆம் தேதி தொழிற்சங்கங்கள்நட த்தவுள்ள நாடு தழுவிய அகில இந்திய வேலைநிறுத்தம் தொழி லாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நடைபெறுகிற போராட்டம் ஆகும். வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது இன்சூரன்ஸ்,எல்ஐசி ஊழியர்களும் பங்கேற்பார் கள். இவ்வாறு சஞ்சய் ஜா பேசினார். முன்னதாக சங்கத்தை வழி நடத்திய முன்னாள் பொறுப்பா ளர்கள் பாராட்டப்பட்டனர். மண்டலப் பொதுச்செயலாளர் வெ.ரமேஷ் நன்றி கூறினார்.
பெஞ்ச்சில் அமர்ந்து டீ குடித்த தலித் மீது தாக்குதல்
திண்டுக்கல், டிச.15 டீ கடையில் சாதி ஆதிக்க மனோபாவமுள்ளவர்களுக்கு இணையாக பெஞ்ச்சில் அமர்ந்து டீ குடித்த தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டு மென தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. வேடசந்தூர் தேவிநாயக் கன்பட்டியிலுள்ள ஒரு டீ கடையில் வியாழனன்று இரவு இருக்கையில் அமர்ந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் டீக குடித்துக்கெர்ண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த சாதி ஆதிக்க மனோபாவம் கொண்ட சக்திவேல், பாலகிருஷ்ணன் ஆகி யோர் “நீ யெல்லாம் எங்களுக்குச் சமமாக அமர்ந்து டீ குடிக்கலாமா” என்று கேட்டு சாதியைச் சொல்லி திட்டி, செருப்பைக் கழற்றி சுரேஷ் குமாரைத் தாக்கியுள்ளனர். இத னால் பாதிக்கப்பட்ட சுரேஷ்குமார் வேடசந்தூர் அரசு மருத்துவமனை யில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். தகவலறிந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத்தலைவர் டி.முத்துச்சாமி, ஒன்றியத்தலைவர் ஏ.கிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட சுரேஷ்குமாரை சந்தித்து ஆறுதல் கூறினர். இது தொடர்பாக வேடசந்தூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தேவி நாயக்கன்பட்டி கிராம தலித் மக்களும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடமும் புகாரளித்துள்ளனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
சம்பவம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத்தலைவர் டி.முத்துச்சாமி கூறியிருப்பதாவது:- தேவி நாயக்கன்பட்டி கிராமத்திலுள்ள டீக்கடைகளில் நீண்டநாட்களாக இரட்டை டம்ளர் முறை உள்ளது. ஊருக்குள் செருப்பு போட்டு நடக்க முடியாது. கோவிலுக்குள் சாமி கும்பிட அனுமதியில்லை. மாவட்ட நிர்வாகம் தீண்டாமைக் கொடுமை களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட காவல்துறை ஆதிக்க மனோ பாவத்துடன் சுரேஷ்குமார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தலை மறைவாக உள்ள சக்திவேல், பால கிருஷ்ணன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும். விரைவாக கைதுசெய்யப்படவிலலை என்றால் போராட்டங்களை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது
திருச்சுழி, டிச.15- திருச்சுழி அருகே தோட்டத்திற்கு சென்ற பெண்ணை மர்ம நபர்கள் பாலியல் வல்லுறவு செய்து கொடூரமாக கொலை செய்தனர். இவ்வழக்கில் 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம், பரளச்சி அருகே உள்ளது ராணி சேதுபுரம் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் சத்தியபாமா(48). திருமணமான இவருக்கு கணவர் ஏற்க னவே இறந்து விட்டார். எனவே, கடந்த எட்டு ஆண்டுகளாக இரு பிள்ளைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலை யில், இவருக்குச்சொந்தமான நிலத்தில் பாசிப்பயறு அறு வடை செய்ய வியாழக்கிழமை காலை சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, விருது நகரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடங்கியது. இந்நிலையில், சத்தியபாமாவின் உடல் முட் புதருக்குள் கிடந்தது. அவர் அடையாளம் நபர்களால், பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக பரளச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வந்தனர். விசாரணையில் அதே ஊரை சேர்ந்த ராமு மகன் சோலை யப்பன் (43) என்பவருக்கும் சத்தியபாமாவிற்கும் பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. சோலையப்பன் வழக்கம் போல் சத்தியபாமாவை சந்திக்க தோட்டத்திற்குச் சென்றுள் ளார். இதைக் கண்காணித்த அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் மகன் அழகர்சாமி (29), சாமிநாதன் மகன் நாகநாதன் (37), கமுதி அருகே உள்ள சிங்கம்புலிப்பட்டி குமாரவேல் மகன் முத்துமணி (35) ஆகிய மூவரும் சோலையப்பனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். சோலையப்பன் ,சத்தியபாமா இருவரும் சந்தித்த போது, மூன்றுபேரும் சத்தியபாமாவை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனார். அப்போது, அவர் சத்தம் போட்டதால் அழகர்சாமி, முத்துமணி, நாகநாதன் ஆகியோர் கத்தியால்சத்தியபாமாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள் ளார். சோலையப்பனை வெளியில் சொன்னால் இதே கதிதான் என மிரட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. அழகர்சாமி, நாகநாதன், சோலையப்பன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய முத்துமணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
செல்போன் திருட்டு
தூத்துக்குடி, டிச.15- தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்தவர் தங்கமாரி யப்பன்(39). இவர் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் கடலை மிட்டாய் கம்பெனி நடத்தி வருகிறார். வெள்ளியன்று அவர் தனது கம்பெனியில் இருந்தபோது அங்கு வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர், தங்கமாரியப்பனுக்குச் சொந்தமான ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்று விட்டார்.