1 ) கார் ரேசில் F1 என்பது
கார் ரேசின் சிகரமான போட்டியாக இருப்பது பார்முலா போட்டியாகும். உலகம் முழுவதிலிருந்து (17) போட்டிகளி லிருந்து தேந்தெடுக்கப்படும் (30) வீரர்கள் இப்போட்டியில் தேர்ந்து வருவர். இதில் ஜெயிப்பவரே உலகச்சாம்பியன் ஆவார். F1 காரின் அமைப்பு அலாதியானது. ஒரே சீட்டும், எடை அதிகமில்லாத கட்டமைப்பு மற்றும் – மூடப்படாத டயர், V 10 எஞ்சின் (இது டர்போ எஞ்சினுக்கு– இணையானது) 400 மைல் வேகத்தை உடனே 40 மைல் – அளவிற்குக் கொண்டுவரக் கூடிய அசாத்யம் கொண்டது. போட்டி வீரர் தலைசிறந்த பயர்புரூப் உடை அணிகிறார். தலைக்கவசமும் விபத்திலிருந்து காக்கும் வகையில் – தயாரிக்கப்பட்டது ஆகும். கருப்பு-வெள்ளை கட்டம் கொண்ட- கொடி, போட்டி முடியும் இடம் என்பதை அறிவிக்கக் காட்டப்படுகிறது.
பூமராங்
பூமாராங் (BOOMERANG) என்பது – ஆஸ்திரேலியா பூர்வ குடிகளின் அரிய, அறிவியல் உத்தி இந்த - ‘ பூமாராங் ’ எனப்படும் வளைத்தடி. இதில் சில வகைகள் உண்டு. வளையாத தடிகள் விலங்குகளை அடித்து வீழ்த்த பயன்படும் பூமராங் ஆகும். வளைந்த தடி ஒரு பக்கம் பட்டையாகவும், மறுபுறம் உருண்டை யாகவும் இருக்கும் அது திரும்பி வரக்கூடிய பூமராங் ஆகும். இந்த பூமராங்கை வீசினால் அது சுமார் 100 அடி (30 மீட்டர்) தூரம் பயணிக்கிறது. பறவைகள் எவ்வளவு வேகத்தில் பறந்தாலும் இந்த பூமராங் அடித்து வீழ்த்தும் சக்தி கொண்டது. எல்லா பூமராங்கும் புவிஈர்ப்பின் நடுவிசை கொண்டு சுழன்று – புறப்பட்ட இடம் நோக்கி வருகிறது என்பது அறிவியல் அதிசயமே!.
ஏ.சி.எஸ்.மணி
2 ) சந்திரன், செவ்வாய்க் கிரகம் சென்ற பிங் டுன்டுன்
சந்திரன், செவ்வாய்க் கிரகம் சென்ற பிங் டுன்டுன் 24ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங்கில் நடைபெற்று வருகின்றது. இந்த ஒலிம்பிகில் யார் மிக வரவேற்கத்தக்கவர் என்றால் பெய்ஜிங் ஒலிம்பிக் மங்களச் சின்னம் பிங் டுன்டுன் மற்றும் சுயெ ருங்ருங் உள்ளன. 2020ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள், சீனாவின் சாங் எ-5 விண்வெளி ஆய்வு கலத்துடன் இணைந்து சென்று, பிங் டுன்டுன் மற்றும் சுயெ ருங்ருங் சந்திரனை அடைந்தன. 2021ஆம் ஆண்டு மே 15ஆம் நாள், தியன் வென்-1 ஏவூர்தியுடன் இணைந்து பிங் டுன்டுன் மற்றும் சுயெ ருங்ருங்கின் புகைப்படம் செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
3 ) பூங்காவான தொழிற்சாலை
அமெரிக்காவின் சிகாகோ ட்ரிப்யூன் நாளேடு பிப்ரவரி 7ஆம் நாள் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், பெய்ஜிங்கில் உற்பத்தியை நிறுத்திய ஒரு தொழிற்சாலை, “வெறித்தனமான புகைபோக்கியை”பயன்படுத்தி, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வீரர்களை வானத்துக்கு அனுப்பியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 மீட்டர் உயரமுடைய இந்தப் பெரிய கட்டிடம், சீனத் தேசிய ஷொவ்காங் பூங்காவில் அமைந்துள்ளது. உலகத்தில் முதலாவது நிரந்தர நகரப் பனிச்சறுக்கு வசதி இதுவாகும். இந்த பூங்கா சீனாவின் முதலாவது அரசு சார் இருப்புருக்கு தொழிற்சாலையாகத் திகழ்ந்தது. தற்போது, இந்தப் பெரிய தொழிற்சாலை, நகரிலுள்ள தனிச்சிறப்புடைய ஒரு பூங்காவாக மாறியுள்ளது. கடைகள், அலுவலகங்கள் மற்றும் அருங்காட்சி யகங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன.