tamilnadu

img

அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம்! திமுக கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்!

அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம்! திமுக கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்!

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்த லில் மக்கள் விரோத அதிமுக - பாஜக கூட்டணியை முழுமையாகத் தோற்கடித்து, திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தருவதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். நாமக்கல்லில் பிப்ரவரி 17, 18 தேதிகளில் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, கட்சியின் நாமக்கல் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற நிதியளிப்புப் பேரவையில் எழுச்சியுடன் உரையாற்றிய தலைவர்கள், ஒன்றிய பாஜக அரசின் பாசிசப் போக்குகளையும், அதற்குத் துணை நிற்கும் அதிமுக. உள்ளிட்ட சக்திகளையும் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டக்குழு சார்பில் ரூ.10 லட்சம் நிதி நாமக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் புதனன்று மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமையில் நிதியளிப்புப் பேரவை நடை பெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ந. வேலுச்சாமி வரவேற்றார். இந்த நிகழ்வில், கட்சியின் வளர்ச்சி நிதியாக நாமக்கல் மாவட்டக்குழு சார்பில் திரட்டப்பட்ட ரூ. 10 லட்சம் நிதியை, பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபியிடம் மாவட்ட தலைவர்கள் வழங்கினர். நவீன பாசிசத்தை வீழ்த்தும் தேர்தல் போர் நிதியைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய எம்.ஏ.பேபி, “தோழர் பள்ளிபாளையம் வேலுச் சாமி மற்றும் தோழர் கருணகாரன் போன்ற தியாகி கள் வாழ்ந்த இந்த நாமக்கல் மண்ணில், கட்சி யின் வளர்ச்சி நிதியை பெறுவதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த நிதி வெறும் பணம் அல்ல; இது கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கை” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “தில்லியில் அமர்ந்தி ருக்கும் பாஜக அரசாங்கம் விவசாயிகள், தொழி லாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் கடுமையாக வஞ்சித்து வருகிறது. அவர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுகவும், நமது கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரு பரந்த போராட்டத் தளத்தில் ஒன்றுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியாக செயல்பட்டு வரும் இந்தியா கூட்டணி கடந்த தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றது போல, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மூன்றா வது முறையாக வெற்றியைப் பெற நாம் பாடுபட வேண்டும்” என்று முழங்கினார். கேரள இடதுசாரி அரசின் சாதனைகளைச் சுட்டிக்காட்டிய அவர், “பாஜக கொண்டு வந்த தொழி லாளர் சட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம் என்று துணிச்சலாகக் கூறிய ஒரே அரசு பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு தான். கேரளாவில் 62 லட்சம் முதியவர்களுக்கு மாதம் ரூ. 2,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தப் போராட்டப் பாதையில் நாம் அனைவரும் ஒன்றி ணைந்து முன்னேறுவோம்” என்று அழைப்பு விடுத்தார். ஆர்எஸ்எஸ் எனும் அபாயகரமான சக்தி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது உரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியை விவரித்தார். “பாஜக என்பது தனித்து இயங்கும் கட்சி அல்ல; அது 2500 கிளை அமைப்புகளைக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இயக்கம். அறிவுஜீவிகளை ஒடுக்குவதற்கும், சமூகத்தில் கலவரங்களை உருவாக்குவதற்கும் எனத் தனித்தனிப் பிரிவுகளைக் கொண்டுள்ள மிக அபாயகரமான சக்தி இது. திருவிழாக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து இடங்கள் என மக்கள் கூடும் இடங்களில் ஊடுருவி, சாதி-மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்த இவர்கள் காத்திருக்கிறார்கள்” என்று எச்சரித்தார். மேலும், “மக்களிடையே நிலவும் ஒற்று மையைச் சீர்குலைக்க நினைக்கும் இத்தகைய வர்க்க விரோதச் சக்திகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியை முறியடிக்க திமுக தலைமை யிலான பலமான கூட்டணியில் நாம் தொடர்கிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்ய இப்போதே களப்பணியைத் துவக்குங்கள்” என்று தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.  ரங்கசாமி ஆகியோர் பேசினர். மேலும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம். அசோகன், எஸ். தமிழ்மணி, சு. சுரேஷ், ஏ.டி. கண்ணன், எம். கணேசபாண்டியன், ஆர். சந்திரமதி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், வர்க்க வெகுஜன அமைப்பு களின் நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்ற னர். நிறைவாக, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கி. தங்கமணி நன்றி கூறினார்.  (ந. நி)