tamilnadu

img

நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் தூக்கி எறிவோம்! 

நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் தூக்கி எறிவோம்! 

கேரளத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் அறைகூவல்!

திருவனந்தபுரம், டிச. 25 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய தொழி லாளர் சட்டத் தொகுப்புகள், தொழி லாளர்களின் அடிப்படை உரிமை களைப் பறித்து, அவர்களை கார்ப்ப ரேட் நிறுவனங்களின் அடிமை களாக மாற்றும் ஒரு பேராபத்து என்று திருவனந்தபுரத்தில் நடை பெற்ற தேசிய தொழிலாளர் மாநாடு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த மக்கள் விரோதச் சட்டங் களுக்கு, கேரளம் அடிபணியாது என்றும்; இச்சட்டங்களை ஒருபோதும் அமல்படுத்தாது என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடியாகப் பிரகடனம் செய்துள்ளார். கார்ப்பரேட் நலனுக்கான சட்டங்கள் கேரள அரசின் தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர் ஆய்வு நிறுவனமான ‘கைல்’ (KILE) இணைந்து நடத்திய இந்தச் சிறப்பு தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச தொழி லாளர் அமைப்பின் (ILO) மரபு களுக்கு எதிரானது என்று சாடினார்.  “8 மணி நேர வேலை என்பதைத் தொழிலாளர் மீதான சுரண்டலுக்கு வழிவகுக்கும் வகை யில் 12 மணி நேரமாக நீட்டிக்க புதிய சட்டம் அனுமதிக்கிறது. காலமுறை வேலைவாய்ப்பு (Fixed Term Employment) என்கிற முறையால் வேலை நிலைத்தன்மை என்பது  இனி கனவாகிவிடும். சூப்பர் வைசர் பதவியில் இருப்பவர்கள் 18,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்கினால், அவர்கள் தொழி லாளர்கள் என்ற வரம்பிற்குள் ளேயே வரமாட்டார்கள் என்பது போன்ற விதிகள் வேதனையளிப்ப வையாக உள்ளன” என்று பினராயி விஜயன் தெரிவித்தார். மனு தர்மத்தை அமல்படுத்தும் முயற்சி மாநாட்டில் பங்கேற்ற சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென்  பேசுகையில், ஒன்றிய அரசு இச்சட்டங் கள் குறித்துப் பல பொய்களைப் பரப்பி வருவதாகவும், நாடாளு மன்ற நிலைக்குழுவின் பரிந்துரை களைத் தன்னிச்சையாகப் புறக் கணித்து விட்டு இச்சட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.  ஏஐடியுசி பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் பேசுகையில், ஒன்றிய அரசின் ‘ஷ்ரம் சக்தி  நீதி’ என்ற கொள்கை அறிவிப்பா னது, உழைக்கும் வர்க்கத்தின் மீது ‘மனுதர்மத்தை’ திணிக்கும் ஒரு மறைமுகத் திட்டமாகும் என்று எச்சரித்தார். “அமைப்புசாரா துறை யில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இச்சட்டம் தோல்வியடைந்துள்ளது.  இது தொழிலாளர்களைக் காப்பதற்கான சட்டம் அல்ல, மாறாகப் பெருநிறுவனங்களின் லாபத்தைப் பாதுகாப்பதற்கான சட்டமாகும்” என்று அவர் குற்றம்சாட்டினார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே. கோபால கவுடா தனது உரையில், இந்தத் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் இந்திய அர சியலமைப்புச் சட்டத்தின் அடிப் படை அம்சங்களான பிரிவு 14, 16,  19 மற்றும் 21 ஆகியவற்றை நேரடி யாக மீறுகின்றன என்று விளக்கி னார். “வேலை பாதுகாப்பும், கூட்டுப் பேர உரிமையும் இல்லாத சட்டங் கள் செல்லத்தக்கவை அல்ல. தொழிலாளர் நலன் என்பது அரசி யலமைப்பின் பொதுப் பட்டியலில் (Concurrent List) உள்ள ஒரு துறையாகும். எனவே, மாநில அரசு தனது அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய தொழிலாளர் விரோதத் திருத்தங்களைத் தடுத்து நிறுத்த முடியும்,” என்று சட்ட ரீதியான தீர்வுகளை முன்வைத்தார். முக்கிய முடிவுகளும் வல்லுநர் குழுவும் இந்த மாநாட்டின் இறுதியில் இரண்டு அமர்வுகள் நடத்தப்பட்டு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இச்சட்டங்களின் தாக்கங்களை நுணுக்கமாக ஆய்வு செய்து, மாநில அளவில் செய்ய வேண்டிய மாற்றங் களைப் பரிந்துரைக்க நீதிபதி கோபால கவுடா தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் பேராசிரி யர் ஷியாம் சுந்தர், வர்கிச்சன் பெட்டா மற்றும் இரண்டு ஆய்வா ளர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழு தனது முதற்கட்ட அறிக்கை யை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கும். கேரள மாநிலத் தொழிலாளர் அமைச்சர் வி. சிவன்குட்டி, நிதி யமைச்சர் கே.என். பாலகோபால், எளமரம் கரீம், சஞ்சய் சிங் மற்றும் பல்வேறு ஒன்றிய தொழிற்சங்கங் களின் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாடு, இந்தியாவிலேயே ஒரு மாநில அரசு, ஒன்றிய அரசின் சட்டத்திற்கு எதிராகத் திரட்டிய முதல் தேசிய அளவிலான போராட்டக் குரலாக அமைந்துள்ளது.  “ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதத் தன்மையைச் சுட்டிக் காட்டி, தொழிற்சங்கப் பிரதிநிதி களுடன் சென்று அழுத்தம் கொடுப் போம். ஐடி துறை மற்றும் கிக் பொருளாதாரம் (Gig Economy) சார்ந்த தொழிலாளர்களின் பாது காப்பை உறுதி செய்வதில் கேரளம் தொடர்ந்து நாட்டிற்கு முன்மாதிரி யாகத் திகழும்,” என்ற உறுதி மொழியுடன் மாநாடு நிறைவுபெற்றது.