tamilnadu

img

பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு வைத்து விட்டு... பர்னால் போட்டால்...

பெட்ரோல் - டீசல் மீதான மத்திய எக்  சைஸ் வரி குறைப்பு அறிவிக்கப் பட்டுள்ளது.  நல்லா பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு வைத்து விட்டு பர்னால் போட்டால் எப்படி இருக்  குமோ அப்படி முடிவு இது. இருந்தாலும் வர வேற்போம். இடதுசாரிகள் மே கடைசி வாரத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு திட்டமிட்டுள்ள சூழலில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிவாஜி தோற்றுப் போவார்

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் அறிவிப்பை பாருங்க. 

*    பெட்ரோல் மீதான எக்சைஸ் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீது ரூ.6ம் குறைக்கப்பட்டுள் ளது. (இதனால் பெட்ரோல் விலை ரூ.9.50 ம், டீசல் விலை ரூ.7.50 ம் குறையும் என்று  மதிப்பீடு)

 *    இதனால் ஒன்றிய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்  

*    மாநில அரசுகளும் ஒன்றிய அரசு போல  “கருணை” காண்பித்து வரிகளை குறைக்க வேண்டும்.  *    உஜ்வாலா திட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு ரூ.200 மானியம் தரப் படும். இதனால் அரசுக்கு இழப்பு ரூ.6100 கோடி.

*    இது ஏழைகளுக்கான அரசு. பிரதமர் “மக்  களே முதன்மையானவர்” என்று கருது பவர்.

இவையே நிதியமைச்சர் வார்த்தைகள்.  ஒவ்வொன்றாக பார்க்கலாம். ஆனால் இந்த  ஆட்சியாளர்களை பாராட்ட வேண்டும். பழுக்க பழுக்க சூடு போட்டாலும் பர்னால் போடும் போது முகத்தில் காட்டுகிற “இரக்கம்” பாருங்க. சிவாஜி தோற்று விடுவார்.

கணக்கு இங்கே, கருணை எங்கே?

மே 2014 இல் மோடி முதன் முறை பதவி ஏற்ற போது எவ்வளவு எக்சைஸ் வரிகள்? பெட்ரோல் மீது ரூ 9.48. டீசல் மீது ரூ.3.56. அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41, டீசல் விலை ரூ.55.49.  இன்று சென்னையில் எவ்வளவு பெட்ரோல்  விலை? ரூ.110. டீசல் விலை ரூ.100. இப்ப  அறிவித்திருக்கிற எக்சைஸ் வரிக் குறைப்பி னால் பெட்ரோல் விலை ரூ.100 ஆகவும் டீசல்  விலை ரூ.93 ஆகவும் இருக்கக் கூடும். 8 ஆண்டு களில் விலை ஏற்றம் எவ்வளவு? பெட்ரோல் 43 சதவீதம். டீசல் விலைகள் 69 சதவீத உயர்வு.  இந்த விலை உயர்வு எதனால்? உலகச் சந்தை யில் கச்சா எண்ணெய் விலை உயர்வாலா!  இல்லை. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்  விலைகள் குறைந்த போது கூட இந்தியாவில் விலைகள் குறையாமல் பார்த்துக் கொள் ளப்பட்டது. வரிகளை அதிகரித்து விலைக் குறை வின் பயன் மக்களுக்கு போகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. உதாரணமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் 105.87 அமெரிக்க டாலர் ஆக 2013 இல் இருந்தது. 2022 இல் இது 97.7  அமெரிக்க டாலர் ஆகவே இருக்கிறது. 2016 இல்  40.76 டாலர்தான். 2020 இல் 41.47 டாலர்தான். உலகச் சந்தை கருணை காட்டிய போதும் கூட உள்ளூரில் பிரதமரும், நிதி அமைச்சரும் கருணை காண்பிக்கவில்லையே! வரிகளை போட்டு விலை குறையாமல் பார்த்துக் கொண்  டார்களே! 

நாய் வாலை அறுத்து நாய்க்கே சூப்

எட்டு ஆண்டுகளில் வரிகள் உயராதா? என்று சிலர் அப்பாவித் தனமாக நினைக்கலாம். 2014 - 2021 காலத்தில் மொத்த வரி வருவாய் 2 மடங்கு உயர்ந்தது. ஆனால் பெட்ரோல் டீசல்  விலைகள் 6 மடங்கு உயர்ந்தது. கார்ப்பரேட்  வரிகள் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள் ளது. செல்வ வரியும் 2016 -17 இல் ரத்து செய்யப்பட்டது. ஆகவேதான் பணக்காரர்கள் மீதான வரிகள் குறைந்து, மொத்த வரியில் ஏழை  மக்கள் மீதான மறைமுக வரிகளின் பங்கு அதி கரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல் டீசல் வரிகள். 

இந்த எக்சைஸ் வரிக் குறைப்பால் 1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று நிதியமைச்சர்  “கண்ணீர்” வடித்துள்ளார். பார்க்க பெரிய தொகையாக தெரியும். ஆனால் 2014 இல் இருந்து இன்று வரை வசூலிக்கப்பட்டுள்ள பெட்ரோலிய வரிகள் எவ்வளவு தெரியுமா? 26 லட்சம் கோடி. அதாவது இந்தியாவின் ஒவ்  வொரு இல்லத்தில் இருந்தும் 1 லட்சம் ரூபாய் சராசரியாக இந்த வரிகளால் பிடுங்கப்பட்டுள் ளது. இப்ப ஒரு லட்சம் கோடி ரூபாயை அரசு  இழக்கிறது எனில் 8 ஆண்டுகளில் பிடுங்கிய ஒரு லட்சம் ரூபாயில் ரூ.3800 ஐ திரும்ப கொடுக்கி றார்கள் என்று அர்த்தம். நாய் வாலை அறுத்து நாய்க்கு சூப் கொடுப்பது மாதிரிதான். 

அறிவுரை கூற என்ன தகுதி?

மாநில அரசுகளும் “கருணை” காண்பிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் அறிவுரை. கேரள அரசு இப்போது குறைத்திருக்கிறது. அது வேறு விசயம். ஆனால் இப்படி அறிவுரை சொல்ல தார்மீக தகுதி மத்திய அரசுக்கு உண்டா? மாநில அரசுகளுக்கு வரி வருவாயில் 41 சத வீதம் தர வேண்டும் என்பது 15 வது நிதி ஆணை யத்தால் செய்யப்பட்ட வரையறுப்பு. இப்படி மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றிக் கொண்டே போயிருக்கிறதே அதில் மாநில அரசுகளுக்கு கிடைத்த பங்கு என்ன? உதாரணமாக 2020- 21 இல் மொத்த பெட்ரோலிய வரி வருவாய் மத்திய அரசுக்கு ரூ.3,72,000 கோடி. ஆனால் மத்திய அரசு மாநில  அரசுகளுக்கு தந்ததோ ரூ.19972 கோடி. 5.36 சதவீதம்தான். என்ன காரணம்? மத்திய அரசு வசூலிக்கிற மொத்த வரிகள் லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.27.90 எனில், அதில் அடிப் படை எக்சைஸ் வரி ரூ.1.40 மட்டும்தான். ஸ்பெசல் எக்ஸைஸ் வரி ரூ 11, விவசாய கட்டுமான வளர்ச்சி செஸ் ரூ 2.50, சாலை கட்டு மான செஸ் ரூ.13 இப்படி நாலு வகை வரிகள் உள்ளது. இதில் அடிப்படை எக்சைஸ் வரி களில் இருந்து மட்டும்தான் 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு போகும். அதாவது ரூ.27.90 வரிகளை போட்டாலும் மாநில அரசுக்கு அதில் கிடைப்பது 58 பைசாதான். செஸ் என்று  தீட்டி விட்டு மாநில அரசுகளுக்கு பங்கு போகா மல் பார்த்துக் கொண்டு இப்ப நான் குறைத் தேன், நீங்களும் குறைங்க என்று சொல்வதில் என்ன நியாயம்? என்ன தார்மீகம்? 

விறகுக்கு மாறியவர்கள் 

உஜ்வாலா திட்டத்திற்கு ரூ.200 மானியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திடீர் கரிசனம். மே 12, 2022 இந்து நாளிதழ் செய்தி இது. உஜ்வாலா பயனாளிகளில் 90 லட்சம் பேர் 2021 - 22 இல் சிலிண்டர்கள் வாங்கவே இல்லை.  மேலும் ஒரு கோடி பேர் ஒரே ஒரு சிலிண்டரை மட்டுமே ஆண்டு முழுக்க வாங்கி உள்ளார்கள். இதோ உத்தரகாண்ட் பற்றி 23.02.2020 இல் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் செய்தி. மொத்த  பயனாளிகள் 3.72 லட்சம் பேர் 13 மாவட்டங் களில் இருந்தாலும் அவர்களில் சிலிண்டர் வாங்கி யவர்கள் 3500 பேர் மட்டுமே. 99 சதவீதம் பேர்  வாங்கவில்லை. விறகுக்கு மாறி விட்டார்கள் என்றுதானே அர்த்தம். 

முதலும் கடைசியும் மக்கள் முதுகே

அடுத்த ஆண்டு 9 மாநிலங்களில் தேர்தல் வரு கிறது என்றவுடன் இப்படி சலுகை வழங்கப்படு கிறது என்று ஊடகங்கள் சில கூறுவது உண்மையே. கடந்த நவம்பர் 2021 இல் இப்படி அறிவிக்கப்பட்ட சலுகைகள் உத்தரப் பிரதேச தேர்தல் முடிந்தவுடன் 16 நாளில் 14 முறை விலை உயர்வு அறிவிப்பாக வந்து “கொடுத்தவரே எடுத்துக் கொண்டாரடி” என்று  ஆகிப் போனதை மறக்க முடியுமா?  பிரதமர் “மக்களே முதன்மையான வர்”என்று கருதுபவர் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆகையால்தான் முதல் அடி மக்  கள் மீது விழுகிறது போல... ஆனால் கடைசி வரை மக்கள் மீதே விழுகிறதே!





 

;