tamilnadu

img

இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்

சென்னை, மே 27- இலங்கையை போல் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலை வர்கள் எச்சரித்தனர். ஒன்றிய அரசின் தவறான பொருளா தாரக் கொள்கைகளை கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கு எதிராக, வேலை யின்மைக்கு எதிராக நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் 7 நாட்கள் நடைபெறும் பிரச்சார இயக்கம் கடந்த 25ஆம் தேதி துவங்கியது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எழுச்சியுடன் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றன. 

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெள்ளியன்று (மே 27) நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை  தாங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “பட்டியலின மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம் எனக்  கூறிக் கொண்டு பல அமைப்புகள் பாஜக வுக்கு காவடி தூக்கிக் கொண்டி ருக்கும் நிலையில், ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் மொழி உரிமை மற்றும் மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை கண்டி த்தும் சாதி, மத மோதல் மற்றும் சிறு பான்மை மக்கள் மீதான தாக்குதலை களையும் எதிர்த்தும் போராட்டம் நடத்தி வரும் இடதுசாரிக் கட்சிகளுடன் விடு தலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்து போராடி வருகிறது” என்றார்.

ஏறக்குறைய 40 ரூபாய் வரை பெட்ரோல் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு, தற்போது 8 ரூபாய் குறைத்துவிட்டோம் எனக் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பிய பாலகிருஷ்ணன், இலங்கையில் ஏற்பட்டுள்ள கொந்தப் பளிப்பு இந்தியாவிலும் வெடிக்கும் என்ற அச்சம்தான் சிறிதளவு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் போல் இந்தியா விலும் பொருளாதார நெருக்கடி ஏற்படு வதை தடுத்து, தேசத்தை பாதுகாக்க  நடைபெறும் இந்த தேசபக்த போரா ட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டுவோம்: இரா. முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில்,  “இலங்கையில் கடைப்பிடிக்கப் பட்ட தவறான பொருளாதாரக் கொள்கையால் விலைவாசி கடுமை யாக உயர்ந்துள்ளது. அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. இதை எதிர்த்து இன்று சிங்கள வர், தமிழர், கிறித்துவர் என அனை வரும் சாதி, மதம், இனம் கடந்து ஒற்றுமையுடன் போராடி வருகிறார்கள். மக்களின் ஒற்றுமைக்கு எழுச்சிக்கு, முன்னால் எந்த சர்வாதிகாரமும் வெற்றி பெறாது என்பதுதான் வரலாறு. அதே ஆணவத்தோடு மோடியும் தவ றான பாதையில் சென்று கொண்டிருக் கிறார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைப்போன்று ஆகஸ்ட் 9-இல் ‘மோடியே வெளியேறு’ என ஒன்றி ணைந்து குரல் கொடுப்போம், சர்வாதி கார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என்றார்.

கார்ப்பரேட்களின் செல்லப்பிள்ளை மோடி!

விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மை மக்களை வாட்டி வதைக்கிறது. இதை மறைக்க சாதி, மத அடிப்படையில் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வேலையின்மைக்கு கொரோனா மட்டும் காரணமல்ல, மோடி அரசும்தான் என்றார்.  கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்லப்பிள்ளைகளாக மோடியும், அமித்ஷாவும் செயல்படுகிறார்கள். இவர்கள் ஏழை, எளிய மக்கள் என  நினைப்பது அம்பானியையும், அதானியையும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களையும்தான். மோடி வெளிநாடு செல்வது தேசத்தை முன்னேற்றுவதற்காக அல்ல. கார்ப்ப ரேட் நிறுவனங்களின் முன்னேற்றத் திற்காகத்தான் என்றும் கூறினார். சிபிஐ(எம்.எல்) மாநிலச் செயலாளர் நடராஜன் பேசுகையில், ஒன்றிய பாஜக அரசு ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, உழைப்பாளி மக்களுக்கு எதிரான அரசு என்றும் வேலையின்மை, விலைவாசி உயர்வு அனைத்து பகுதி மக்களையும் கடுமையாக பாதித்துள்ள நிலையிலும் மக்களைப் பற்றி கவலைப்படாத ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து கவலைப்படுகிறது” என்றார். சிபிஎம் வடசென்னை மாவட்டச் செய லாளர் எல்.சுந்தர்ராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சிபிஐ மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், விசிக மாவட்டச் செயலாளர்கள் இரா.செல்வம், செல்லதுரை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.