tamilnadu

img

சமூக அக்கறையுடன் வழக்குரைஞர்கள் செயல்பட வேண்டும்

சமூக அக்கறையுடன் வழக்குரைஞர்கள் செயல்பட வேண்டும்

உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அறிவுறுத்தல்

சேலம், ஜூலை 12- வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தை தாண்டி சமூக அக்கறையுடன் செயல் படுவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அறிவு றுத்தியுள்ளார். சேலம் வழக்குரைஞர்கள் சங்கத் தின் சார்பில், மூத்த வழக்குரைஞர் பி.என்.மணியின் 50 ஆவது ஆண்டு  பொன் விழா சனியன்று கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினர்களாக சுற்றுலாத்துறை அமைச் சர் ரா.ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், முன் னாள் நீதிபதிகள் கலையரசன், ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப் போது உயர்நீதிமன்ற நீதிபதி இளந்தி ரையன் பேசுகையில், வழக்குரைஞர் தொழில் என்பது அறிவுத்திறன் சார்ந் தது மட்டுமல்ல; நீதிமன்றத்தில் பொறுப் புணர்வுடன் புன்முறுவல் மற்றும் பொறு மையுடன் செயல்பட வேண்டியது மிக வும் முக்கியம். தங்கள் தொழிலில் மிகுந்த பக்தியுடன், மாண்புடன் நடந்து, நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும். மன அமைதியுடன் இருந் தால் மட்டுமே வழக்குரைஞர் தொழி லில் நிலையாக சாதிக்க முடியும். வழக் குரைஞர்கள் நீதிமன்றத்தை தாண்டி  சமூக அக்கறையுடன், சமுதாய சீர் திருத்தம் பெறும் வகையில் செயலாற்ற வேண்டும். அவ்வாறு செயல்பட்டதால் தான், மூத்த வழக்குரைஞர்கள் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். வழக் காடிகளுக்கு நீதியை பெற்று தருவது டன் மட்டுமல்லாமல், போதைப்பொரு ளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சா ரங்களில் தங்கள் பங்களிப்பை செலுத் தலாம். நீதிபதிகள் சட்டத்திற்குட்பட்டு முழு சுதந்திரத்துடன் இயங்க முடியும் என்பதால், நீதிமன்றங்களில் தலையீடு உள்ளதை ஏற்க முடியாது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் காவல்துறை சரி யான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றங்களுக்கு வராமலேயே பெரும் பாலான குற்றங்களை தடுக்க முடியும். இதுபோன்ற தருணங்களில் வழக்குரை ஞர்கள் தங்களது பங்காளிப்பை சிறப் பான முறையில் செய்ய முன்வர வேண் டும், என்றார். இந்நிகழ்ச்சியில், சேலம் வழக்குரைஞர் சங்க செயலாளர் நரேஷ் பாபு, பொருளாளர் அசோக்குமார், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.