திருச்சி மாநகராட்சி ஆணையராக லி. மதுபாலன் பொறுப்பேற்றார்
திருச்சிராப்பள்ளி, ஜுன் 27- தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய லி. மதுபாலனை, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளியன்று ஆணையராக பொறுப்பே ற்றுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற ஆணையர், திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற ஆணையரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.