tamilnadu

img

கொல்லங்கோடு நகராட்சித் தேர்தல் : கேரள அமைச்சர் பிரச்சாரம்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜ் பங்கேற்று உரையாற்றினார். பாறசாலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹரீந்திரன், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் விஜயமோகன், கொல்லங்கோடு வட்டாரச் செயலாளர் அஜித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினர் சணல்குமார் தலைமையேற்றார்.