tamilnadu

img

காங்கிரஸ் தலைவராக கார்கே இன்று பதவியேற்கிறார்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே புதன்கிழமையன்று பதவியேற்க உள்ளார். மல்லிகார்ஜூன கார்கே முறைப்படி தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர், இடைக்கால தலைவராக செயல்பட்டு வந்த சோனியா காந்தி, அவரை தலைவருக்கான நாற்காலியில் அமர வைப்பார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி,  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்,  காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.