tamilnadu

img

கேரள முஸ்லிம் லீக் தலைவர் ஹைதர் அலி ஷிஹாப் மறைவு

மலப்புரம், மார்ச் 7- மறைந்த முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பாணக்காடு ஹைதரலி ஷிஹாப் அவர்களின் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அஞ்சலி செலுத்தினார். மத நல்லிணக்கத்திற்காக எப்போ தும் நிலைத்து நின்று தனித்துவம் பெற்றவர் ஹைதர் அலி. முஸ்லீம் லீக் உயர்நிலைக் குழுவின் உறுப்பி னராகவும், அரசியல் விவகாரக் குழு வின் தலைவராகவும், சமஸ்தா கேரள ஜம்இய்யதுல் உலமாவின் துணைத் தலைவராகவும், சுன்னி இளைஞர் குழு வின் மாநிலத் தலைவராகவும் இருந் தார். மலப்புரம் டவுன் ஹாலில் வைக் கப்பட்டுள்ள உடலுக்கு முதல்வர் பின ராயி விஜயன் அஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, அமைச்சர்கள் பி.ராஜீவ், பி.ஏ.முகமது ரியாஸ், வி.அப்துரண் மான், பி.பிரசாத், சபாநாயகர் எம்.பி. ராஜேஷ், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், நடிகர் மம்முட்டி, பி.சி.சாக்கோ,  ஏ.என்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக கள் ராமச்சந்திரன் கடனப்பள்ளி, கே.எஸ்.பாபு, ரோஜி. எம் ஜான், அனூப் ஜேக்கப் உள்ளிட்ட பல்லாயி ரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி னர். திங்களன்று (மார்ச் 7) அதிகாலை 2 மணிக்கு அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

சாதிக்கலி ஷிஹாப்  புதிய தலைவர்

முஸ்லிம் லீக்கின் புதிய மாநிலத் தலைவராக சாதிக்கலி ஷிஹாப் அறி விக்கப்பட்டார். லீகின் தேசிய தலை வர் காதர் மொய்னுதீன் இதனை தெரி வித்துள்ளார். மறைந்த ஹைதர் அலி யின் வீட்டில் நடைபெற்ற முஸ்லிம் லீக்கின் உயர் அதிகாரக் குழுக் கூட்டத் தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சாதிக்கலி தங்ஙள், ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙளின் சகோதரரும் முஸ்லிம் லீக்கின் மலப்புரம் மாவட்டத் தலைவருமாவார்.