tamilnadu

img

‘மெடிசெப்’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கேரள முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திருவனந்தபுரம், ஜுன் 25- கேரளத்தில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான மெடிசெப் (MEDISEP)-ஐ முதல்வர் பினராயி விஜயன் ஜூலை 1, அன்று தொ டங்கி வைக்கிறார் என்று நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் மேலும் கூறியதாவது: ஊழியர்கள், ஓய்வூதியம் பெறு வோர் மற்றும் அவர்களைச் சார்ந்த வர்கள் உட்பட 30 லட்சத்துக்கும் அதிக மான மக்கள் மருத்துவத் திட்டத்தின் கீழ் உள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட பகுதி நேர தற்காலிக பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர் கள், ஆசிரியர் அல்லாத பணியாளர் கள், ஓய்வூதியம் பெறுவோர் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் திட்ட உறுப்பினர்களை சார்ந்திருப்போர் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப் பர். மாநில அரசின் கீழ் பணியாற்றும் அகில இந்திய சேவை அலுவலர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் விருப்ப அடிப்படையில் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள். இத்திட்டத்தில் மாநில அரசின் நிதி உதவி பெறும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், ஓய்வூதியம் பெறு வோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்  மற்றும் முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், தலைமைக் கொறடா, சபாநாயகர், துணை சபாநாய கர் மற்றும் நிதிக் குழுக்களின் தலை வர்கள், அவர்களால் நேரடி நியமனம் பெறும் தனி ஊழியர்கள், ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் மற்றும் அவர்க ளைச் சார்ந்தோர் மெடிசெப்பில் பயனாளிகளாவர்.

ரொக்கமில்லா சிகிச்சை

10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் / ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் 20 லட்சத்துக்கும் அதிகமான அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு மாநிலத்திலும், வெளியிலும் அங்கீ கரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சை வசதிகளை வழங்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மெடிசெப் திட்டத் தில் உறுப்பினராகும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மாதத்திற்கு ரூ.500/- பிரீமியம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அரசு/தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகள் அல்லது சார்ந்தி ருப்பவர்களால் கோரப்படும் அங்கீக ரிக்கப்பட்ட சிகிச்சைக்கு அடிப்படைக் காப்பீடு மூன்று வருட காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம். இதில் `1.5 லட்சம் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்டு, பயன் படுத்தப்படாவிட்டால் செல்லாததாகி விடும்.

ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் ஃப்ளோட் டர் (floater) அடிப்படையில் காப்பீடு செய்யப்படுவதால், மூன்றாண்டு கால இடைவெளியில் எந்த நேரத்திலும் இதைப் பயன்படுத்தலாம். அடிப்படை மருத்துவ பாதுகாப்பு மட்டுமல்லாது திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள உறுப்பு மாற்று சிகிச்சைக்கு, காப்பீட்டு நிறுவனத்தால் ரூ.35 கோடிக்கு குறையாத தொகையை பயன்படுத்தி அமைக்கப்படும் கார்ப்பஸ் நிதியி லிருந்து (மூன்று வருட பாலிசி காலத்திற் கள்) தேவையான தொகை வழங் கப்படும். திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் அதனுடன் இணைந்த பகல்நேர  சிகிச்சை முறைகளுக்கு பயனாளியால் ஏற்படும் செலவை ஈடுசெய்வதே இத் திட்டத்தின் நோக்கமாகும். இணைக்கப் பட்ட மருத்துவமனைகளில் மருத்து வச் செலவுகள், மருந்துச் செலவுகள், மருத்துவர் / உதவியாளர் கட்டணம், அறை வாடகை, நோய் கண்டறிதல் செலவுகள் மற்றும் நோயுடன் தொடர்பு டைய உணவுச் செலவுகள் ஆகியவை அடங்கும். இத்திட்டத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், தங்கள் மெடி செப் அடையாள அட்டையை www. medisep.kerala.gov.in இல் மெடிசெப் ஐடி பயனர் ஐடி மற்றும் PEN / PPO  எண்/பணியாளர் ஐடியை கடவுச்சொல் லாகப் பயன்படுத்தி உள்நுழைந்து பதிவிறக்கம் செய்யலாம். மாநில அரசின் மேற்பார்வையில் ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் மூலம் ‘மெடி செப்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பாலகோபால் தெரிவித்தார்.
 

;