tamilnadu

img

விளையாட்டு

ஐபிஎல் 2025 மீண்டும் கேரளா புறக்கணிப்பு

18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி மேற்கு  வங்க தலைநகர் கொல்கத்தா நகரில் தொடங்குகிறது. முதல் ஆட்டத் தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை (தமிழ்நாடு - சென்னை சூப்பர் கிங்ஸ்), பெங்களூரு (கர்நாடகா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), ஹைதராபாத் (தெலுங்கானா - சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்), கொல்கத்தா (மேற்கு வங்கம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மும்பை (மகாராஷ்டிரா - மும்பை இந்தியன்ஸ்), தில்லி (தில்லி கேபிடல்ஸ்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான் - ராஜஸ்தான் ராயல்ஸ்), லக்னோ (உத்தரப்பிரதேசம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்), அகமதாபாத் (குஜராத் - குஜராத் டைட்டன்ஸ்), முல்லன்பூர் (பஞ்சாப் - பஞ்சாப் கிங்ஸ்) என 10  அணிகளின் அந்தந்த ஹோம் கிரவுண் டில் (சொந்த மைதானம் - நகரம், மாநிலத்தின் பெயருக்கு ஏற்ப) போட்டி கள் நடைபெறுகின்றன.  இதுபோக தரம்சாலா (இமாச்சலப் பிரதேசம் - பஞ்சாப் அணியின் கூடுதல் ஹோம்), கவுகாத்தி (அசாம் - ராஜஸ் தான் அணியின் கூடுதல் ஹோம்), விசா கப்பட்டினம் (ஆந்திரா - தில்லி அணி யின் கூடுதல் ஹோம்) என ஹோம் கிரவுண்ட் இல்லாத மாநிலங்களிலும் போட்டி நடைபெறுகின்றன. ஆக மொத்தம் 13 மைதானங்களில் 18ஆவது சீசன் ஐபிஎல் சீசன் நடைபெறுகிறது. தங்கள் மாநிலங்களின் பெயரில் ஐபிஎல் அணிகள் இல்லையே என்ற  ரசிகர்களின் ஏக்கத்தை போக்கவும், பெரிய மைதானம் என்ற அடிப்படையில் தரம்சாலா, விசாகப்பட்டினம், கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் நாட்டின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான கேரளாவின் திருவனந்தபுரம் மைதானம் ஐபிஎல் போட்டிகளின் போது கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுவதற்கு அம் மாநில ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருவனந்தபுரத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. மைதான பார்க்கிங், மைதான இருக்கை என அனைத்தும் பிரம்மாண்டமாகவே உள்ளது. அப்படி இருக்கையில் ஐபிஎல் நிர்வாகம் கேரளாவை புறக்கணிப்பது ஏன்? அரசியல் காரணம் இருக்கிறதா? என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.

இமானே கலீப் அவமதிப்பு எதிரொலி  குத்துச்சண்டையில் களமிறங்கிய அல்ஜீரிய பெண்கள்

2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாரீஸ் (பிரான்ஸ்) ஒலிம்பிக் தொடரின் மகளிர் குத்துச் சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார் அல்ஜீரியா வீராங்கனை இமானே கலீப்.  16ஆவது சுற்றில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி யை எதிர்த்து, இமானே கலீப் மோதினார். வெறும் 46 நொடிக ளில் மூக்குடைந்த நிலையில் போட்டியிலிருந்து விலகினார் ஏஞ்சலா கரினி. தொடர்ந்து,”இமானே கலீப் பெண் அல்ல, அவர் ஆண்” என ஏஞ்சலா கரினி குற்றம் சாட்டினார்.  இதனையடுத்து இமானே கலீப் தன்னுடைய பாலி னம் தொடர்பாக அனைத்து ஆதார தகவல்களையும் வெளி யிட்டு, தன் மீது அவதூறு பரப்புவதாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திடம் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் விளையாட அனுமதி வழங்கியது. இறுதிப்போட்டி வரை முன்னேறிய இமானே கலீப், இறுதியில் சீன வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.  இந்நிலையில், இமானே கலீப் மூலம் அல்ஜீரியாவில் மகளிர் குத்துச்சண்டை பிரபலமாகியுள்ளது. எங்கள் நாட்டு பெண்ணை பாலினரீதியாக துன்புறுத்திய இத்தாலி உள்ளிட்ட நாடுகளை வீழ்த்தி ஒலிம்பிக்கில் இமானே கலீப்புடன் இணைந்து குத்துச்சண்டை ஆதிக்கம் செலுத்து வோம் என அல்ஜீரிய பெண்கள் களமிறங்கியுள்ளனர். நாட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் பெண்கள், சிறுமிகள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.  அல்ஜீரிய பெண்கள் குத்துச்சண்டையில் அவ்வள வாக ஆர்வம் இல்லாதவர்கள். மல்யுத்தம் ஓரளவு விளையாடு வார்கள். நீச்சல், கைப்பந்தில்தான் ஆர்வமாக இருப்பார்கள். குறிப்பாக இஸ்லாமிய பழமைவாதமும் பெண்களை விளையாட்டில் இருந்து தடுத்தது. இத்தகைய சூழலில் தற்போது இமானே கலீப் மூலம் பெண்கள், சிறுமிகள் ஆர்வத் துடன் குத்துச்சண்டையில் பங்குபெற்று வருகின்றனர்.