கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புன்னம் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின், காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர். இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சக்திபால கங்காதரன், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
