திமுக கட்சிப் பதவியிலிருந்து க. பொன்முடி விடுவிப்பு!
சென்னை, ஏப். 11 - கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஏப்.6) பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் க. பொன்முடி, பெண்களை இழிவுபடுத்திப் பேசினார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி உட்பட பலரும் பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த னர். “அமைச்சர் க. பொன் முடி அவர்களின் சமீபத்திய பேச்சு வன்மையான கண்ட னத்திற்குரியது. பொறுப் பற்ற இந்த பேச்சுக்காக அவர் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று சிபிஎம் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் வலியுறுத் தினார். இந்நிலையில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடு விக்கப்படுவதாக கட்சியின் தலைவரும்- தமிழக முதல்வ ருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார். பொன்முடிக்குப் பதில், திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட் டார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி சீனா அதிரடி
பெய்ஜிங், ஏப்.11 - சீனாவை மிரட்டிப் பார்க்கலாம் என்று அந்நாட் டுப் பொருட்களுக்கு 34 சதவிகிதம் வரி விதிப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். பின்னர், அதை 84 சதவிகித மாக உயர்த்தினார். இதை யடுத்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு 84 சதவிகி தம் வரி விதித்து பதிலடி கொடுத்தது. உடனே சீனா மீதான வரியை 125 சதவிகித மாக டிரம்ப் அதிகரித்தார். இதற்கு சீனாவும் 125 சதவிகி தம் வரி விதித்து மீண்டும் பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தகப் போரை எதிர்கொள்ளத் தயார் என்று ஏற்கெனவே அறிவித்துள்ள சீனா, இந்த நடவடிக்கையில் இறங்கி யுள்ளது. இதையடுத்து, சீனப் பொருட்கள் மீதான வரியை 145 சதவிகித மாக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடை! மயிலாடுதுறை, ஏப்.
11 - மயிலாடுதுறையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார். மீன்பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்படு வதற்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தி யுள்ளார்.
தங்கம் விலை 3 நாட்களில் ரூ.4,165 உயர்வு
சென்னை, ஏப். 11 - கடந்த வாரத்தின் இறுதி யில் குறையத் துவங்கிய தங்கத்தின் விலை, வியாழக் கிழமை பவுனுக்கு ரூ. 1,200 அதிகரித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 1,485 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் ரூ. 8,745-க்கும், ஒரு பவுன் ரூ. 69,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.