tamilnadu

img

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுக!

பெரம்பலூர், டிச.4- மின்சார உரிமையை தகர்க்கும்  மின்சார சட்டத் திருத்த மசோதாவை  ஒன்றிய பாஜக அரசு அவசியம் கைவிட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.  பெரம்பலூரில் ஞாயிறன்று செய்தி யாளர்களை சந்தித்த அவர், மேலும் கூறியதாவது: தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. மாநில அரசாங்கத்திற்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.  இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்  துள்ளது. ஆளுநரை திரும்பப் பெற  வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வருகிறது. 

ஒன்றிய அரசு சார்பில் மின்சார திருத்தச் சட்டத்தினை வருகின்ற  நாடா ளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்து அதனை நிறைவேற்ற பாஜக  அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மின்  சார திருத்த சட்டம் அமலுக்கு வந்தால், மின்வாரியம்  தனியார் மயமாக்கப் பட்டு விடும். ஏழை எளிய மக்கள், சிறு  தொழில் நடத்துபவர்கள் மற்றும் விவ சாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படு வார்கள். எனவே இந்த மசோதா தாக்க லாகும் நாளன்று  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வலுவான  எதிர்ப்பியக்கத்தை முன்னெடுப் போம். தமிழக அரசு, மாற்று திறனாளி களுக்கு உதவித்தொகையில் 500  ரூபாய் உயர்த்தி கொடுத்து இருப்பது  வரவேற்கத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற் பேட்டை துவங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  பெரம்பலூர் மாவட்டம் மலையா ளப்பட்டி பகுதியில் சின்னமுட்லு அணை கட்டும் திட்டத்தினை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண் டும். அவ்வாறு எடுக்கப்படுமானால் ஏராளமான விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு நிலத்தடி நீர்மட்ட மும் உயரும்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. மேலும், ஆதார் இணைப்பு மூலம் எந்த வித மான பாதிப்பும் இல்லை என்று தமி ழக அரசு தெரிவித்தாலும், மக்கள் மத்தி யில் அச்சம் நிலவுகிறது. மின் இணைப்  புடன் ஆதார் இணைப்பை கைவிட  வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு கள், இரண்டு மூன்று வீடுகள் உள்ள  இடங்களில் பொது (காமன் சர்வீஸ்)  மின் இணைப்பிற்கு வணிக ரீதியி லான மின் கட்டணம் வசூலிப்பது ஏற்பு டையதல்ல. மேலும் இரண்டு மாதங்க ளுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல்  செய்வதை விடுத்து மாதம் தோறும் மின் கட்டணத்தை கணக்கீடு செய்து  வசூல் செய்வதற்குரிய ஏற்பாடுகளை யும் செய்திட வேண்டும்.   மதுக் கடைகளை மூட வேண்டும், விற்பனை நேரத்தை குறைக்க வேண்  டும் என்று வலியுறுத்தி வருகிறோம். நீதிமன்றமும் அதற்கான ஆணை களை பிறப்பித்து இருக்கிறது. எனவே மது விற்பனையினை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரூர் கம்பெனி என்ற பெயரில் பல்வேறு சீர்கேடுகள் நடைபெறுவ தாக டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டு இருக்கிறார் கள். இதனை தமிழக அரசு ஆய் வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில செயற் குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநி லக்குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.கலையரசி, ரெங்கநாதன், கோகுல கிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.  முடிவில் கட்சியின் கட்டிட நிதி யாக பெரம்பலூர் மாவட்டக்குழு  சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ண னிடம் வழங்கப்பட்டது.

;