tamilnadu

img

அன்றாடம் அவசரநிலையை உருவாக்கும் ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்கள்

சென்னை, ஜூலை 5 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அன்றாடம் அவசர நிலையை உருவாக்கும் வகையில் உள்ளதாகவும் அந்தசட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள் ளார். ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள மோடி அரசின் புதிய குற்ற வியல் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நாடு முழுவதும் போராட்டங் கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளி யன்று (ஜூலை 5) சென்னை உயர்நீதிமன்றம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஒன்றிய பாஜக அரசு கொண்டு  வந்துள்ள 3 குற்றவியல் சட்டங் களை எதிர்த்து நாடே கொந்தளிக் கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 140க்கும் மேற்பட்டோரை தற்காலிக நீக்கம் செய்துவிட்டு ஒரே நாளில் இந்த  சட்டங்களை மோடி அரசு நிறை வேற்றியது.  சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டுவதற்கு மாறாக, இந்த 3 குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதத்தில், இந்தியில் பெயர் சூட்டியுள்ளனர்.  இந்த சட்டத்தின்படி யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதி என முத்திரை குத்த முடியும். காவல் நிலையத்தில் கைது செய்யப் பட்டவரை காலம் முழுவதும் சிறை யில் அடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒருவரை கைது செய்தால் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி நீதிமன்ற காவலில் (ரிமாண்ட்) வைக்க முடி யும். மாறாக, வட்டாட்சியரே ரிமாண்ட் செய்யலாம் என்கிறது இந்தச் சட்டம். விஏஓ கூட ரிமாண்ட்  செய்யலாம் என்று சொல்வதற்கு சட்டத்தில் வழி உள்ளது. 15 நாட்கள் ரிமாண்ட் செய்யலாம் என்ற நடை முறையை மாற்றி 90 நாட்களாக உயர்த்தி உள்ளனர். சிறையில் நடை பெற்ற கொடுமைகளை அவ்வப் போது நீதிபதியிடம் தெரிவிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. சாட்சி சொல்கிற உரிமையை கூட சாட்சி யிடம் இருந்து புதிய சட்டம் பறித்து விடுகிறது. அரசை விமர்சித்தால் தேச விரோதிகள் என்று கைது செய்யும் வகையில் கொடுமையான பிரிவுகள் உள்ளன.   தற்போது நடைபெறும் வழக்கறி ஞர்கள் போராட்டம், அவர்களது பிரச்சனை, நீதிமன்றம் சம்பந்தப் பட்டது அல்ல. 140 கோடி மக்கள் சம்பந்தப்பட்டது. மனித உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் போராட்டங்கள் நடைபெறும் காலத்தில், அதை காலில் போட்டு மிதிக்கிற எதேச்சதி கார மோடி அரசு இந்த சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவசரநிலைக் காலத்தை பற்றி இப்போது பிரதமர் பேசுகிறார். இந்த சட்டங்கள் அமலாகிவிட்ட பிறகு அவசரநிலை என்று ஒன்று தனியாக பிறப்பிக்க வேண்டிய தில்லை. அன்றாடம் அவசர நிலை தான். எனவேதான் நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராடுகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் சட்டங் களை நிறுத்தி வைக்க கோரியுள் ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு விரிவான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன.  நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் எதிர்க் கிறார்கள். எனவே, ஒன்றிய அரசு இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார், வழக்கறிஞர் திரு மூர்த்தி, விசிக சார்பில் வழக்கறி ஞர் பார்வேந்தன், சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, துறைமுகம் பகுதிச் செயலா ளர் எம்.ஜலாலுதீன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அருள்குமார் ஆகியோர் பேசினர். மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்பு வழக்கறிஞர்கள் மறியல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள  வழக்கறி ஞர்கள் நீதிமன்றம் முன்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆண்டிராஜ் மற்றும் அன்பரசு ஆகியோர்  தலைமை யில் ஒத்தக்கடையில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டமும், ஊர் வலமாக சென்று உயர்நீதிமன்றத் தில் உள்ள காந்தி சிலை முன்பு  தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்ட னர். போராட்டத்தில் அகில இந்திய  வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எல். ஷாஜி செல்லன், திமுக வழக்கறிஞர் திரு நாவுக்கரசு, அதிமுக வழக்கறிஞர் துரைப்பாண்டி, மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் மற்றும் வழக்கறி ஞர்கள் வாஞ்சிநாதன், சீனி சையதம்மா ஆகியோர்  பேசினர்.  மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் நெடுஞ் செழியன், செயலாளர் மோகன் குமார் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இந்த போராட்டத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் முத்து அமுதநாதன், மாவட்டச் செயலாளர் சௌரிராமன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சீனிவாசராகவன், மோகன் காந்தி, வாமணன், கிஷோர், பாரதி, ராஜேஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்  கலந்து  கொண்டனர்.

;