tamilnadu

img

பாஜக அரசு நீடிக்கும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்து

சென்னை, டிச. 6- பாஜக அரசு நீடிக்கும் ஒவ்வொரு வினாடியும் சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி அரசியல் சாசன சட்டம் அனைவருக்கும் அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாப்போம், அனைத்து மத வழிபாட்டு உரிமையை  பாதுகாப்போம் என வலியுறுத்தி தமுமுக சார்பில் சென்னை வள்ளு வர் கோட்டம் அருகே செவ்வாயன்று (டிச. 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:    இந்தியா. மதச்சார்பற்ற நாடு என உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கியது. நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாபர்  மசூதியை இடித்தது போல் இனி இந்திய மண்ணில் ஒரு வழிபாட்டு தலத் தையும் இடிக்க அனுமதிக்க மாட்டோம். எத்தனை ஆயுதங்கள் வந்தாலும், எத்தனை சங்பரிவார் கூட்டங்கள் வந்தாலும் இனிமேல் ஒரு வழிபாட்டு தலத்திற்கு ஆபத்து  ஏற்பட்டால் கூட சாதி, மதங்களை கடந்து அனைவரும் இந்தியர்கள் என்ற குடையின் கீழ் திரண்டு நாங்கள்  படைக்கலமாக மாறுவோம். ஒன்றிய பாஜக அரசு நீடிக்கும்  ஒவ்வொரு விநாடியும் சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்து கிறது. பல்வேறு வடிவங்களில் அச்சுறுத்தல்கள் வந்து கொண்டி ருக்கிறது. பாஜக ஆளாத மாநிலங் களில் சிறுபான்மை மக்கள் எந்த அச்சுறுத்தலும் இன்றி பாதுகாப்புடன் வாழ்கிறார்கள். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், கடுமையாக தாக்கப்படுகிறார்கள்.

ஆடை உரிமை 

கர்நாடகாவில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணி யும் பிரச்சனையை மையமாக வைத்து பிரச்சனையை உருவாக்கி னார்கள். அரசாணை வெளியிடுகிறார் கள். ஈரானில் உள்ளவர்கள் ஆடை  அடையாளம் எங்களுக்குத் தேவை யில்லை எனக் கூறுகிறார்கள். அது அவர்களது உரிமை. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஆடை அடையாளம் வேண்டும் எனக் கேட்கிறார்கள். இது இவர்களது உரிமை. ஆடை அடையாளம் வேண் டுமா வேண்டாமா என தீர்மானிக்க பாஜக யார்? 

பரிதாப நிலை

இந்தியாவில் பல மதங்களை  சார்ந்தவர்கள் பல அடையாளங்க ளோடு இருக்கிறார்கள். ராணு வத்தில் உள்ள சீக்கியர்கள் தொப்பி  அணிவதில்லை. டர்பன் கட்டிக் கொள்கிறார்கள். அதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது அல்லவா. இந்துக்கள் ஒருவிதமான ஆடை அணிய  அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இஸ்லாமிய பெண்களுக்கு அந்த அடையாளம் கூடாது என உச்சநீதிமன்றம் வரை வழக்கை கொண்டு செல்கிறார்கள். நீதி மன்றங்கள் கூட சனாதன கூட்டத்திற்கு அடிமைப்பட்டு விட்டதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு 

அரசியல் சாசனத்தில் உள்ள மதச்சார்பின்மை என்பதை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை நீதிமன்றம் மதச்சார்பின்மை வேண்டாம் எனக் கூறிவிட்டால் இந்தி யாவை இந்துத்துவா நாடு என  பிரகடனப்படுத்துவார்கள். இந்துத்துவா என பிரகடனப்படுத்தப் பட்டால் அது இந்துக்கள் நாடு என  நினைக்க வேண்டாம், ஏனென்றால் இந்துத்துவா என்பது வேறு இந்துக் கள் என்பது வேறு. இந்து என்பது  வேறு. இந்து மதவெறி என்பது வேறு.  நாடு இந்து மதவெறியர்களின் கூடாரமாக மாறிவிடும். எனவே நாட்டில் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், சமணர் கள், சீக்கியர்கள் என பல்வேறு மதங்களால் பிரிந்திருந்தாலும் இந்தி யர்கள் என்ற ஒற்றை சிந்தனையோடு சனாதன சக்திகளை, மதவெறி பாஜக  கூட்டத்தை 2024ஆம் ஆண்டு தேர்தலில்  வீழ்த்த வேண்டும். மதச்சார்பின்மை என்ற மகத்தான அரசியல் சாசனத்தை  உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் நாட்டின் பன்முகத்  தன்மையை பாதுகாக்க, மதச்சார் பின்மையை பாதுகாக்க, அரசியல்  சாசனத்தை பாதுகாக்க, இஸ்லாமி யர்கள், சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதலை எதிர்த்து சாதி மதங்களை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.  ஆர்ப்பாட்டத்தில் அடையாறு பள்ளிவாசல் தலைமை இமாம் முனை வர் சதீதுத்தீன் பாகவி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர். சா.பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதய ராஜ் உள்ளிட்ட பல அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேசினர்.


 

;