tamilnadu

img

நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்

சென்னை, அக். 6 - சிறையில் நீண்ட காலமாக உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று  தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். உபா (யுஏபிஏ) சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், என்ஐஏ அமைப்பை கலைக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழகத் தில் இணை ஆட்சி நடத்த முயலும் ஆளுநரை கண்டித்தும் வியாழ னன்று (அக்.6) சைதாப்பேட்டை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: வெடிகுண்டுகள் தயாரிக்க ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்கிறது என்று நீதிமன்றத்திலேயே ஆர்எஸ்எஸ் நபர் வாக்குமூலம் தந்துள்ளார். அதனை அடிப்படையாக வைத்து பயங்கர வாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு  வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும். வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டால் வழிபாட்டு தலங்களை வன்முறை கூடங்களாக மாற்றுவார்கள். பல மொழி, கலாச்சாரம் கொண்ட பன்முக தன்மை வாய்ந்த இந்தி யாவை இந்துநாடாக மாற்ற முயற்சி க்கிறார்கள்.

இடதுசாரிகள் எதிர்த்த சட்டம்

2009ம் ஆண்டு காங்கிரஸ் தலை மையிலான ஐமுகூட்டணி அரசு உபா சட்டத்தை கொண்டு வந்த போது இடதுசாரிகள் எதிர்த்தனர். அதனையும் மீறி அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படு பவர்களுக்கு எளிதில் ஜாமீன் கூட கிடைக்காது, பாஜக ஆட்சியில் உபா சட்டத்தின் கீழ் 388 வழக்குகள் பதியப்பட்டு, 4600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக-வை எதிர்த்த காரணத்திற்காக ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டு 3 வருடங்களாக சிறையில் உள்ளார். அத்தகைய கொடிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

காந்தியை கொன்றவர்களின் விநோத காரணம்

அம்பேத்கரின் 136வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில், அவரின் நூற்றாண்டை கொண் டாடுகிறோம், காந்தியை கொன்று விட்டு, அவரின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்று விநோத காரணங்களை கூறி  ஊர்வலத் திற்கு ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்கிறது. அதை எப்படி அனு மதிக்க முடியும்?

பொதுமன்னிப்பு

தமிழக சிறைகளில் நீண்ட காலமாக உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு  ஒரு குழு அமைத்துள்ளது. அந்தக் குழு என்ன அறிக்கை கொடுக்கும் என தெரியவில்லை. இருப்பினும், இஸ்லாமிய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் குறிப்பிடுகையில், பாஜக தலைவராக ஆளுநர் செயல்படு கிறார். தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் போட்டி அரசு நடத்து கிறார். தமிழக அரசுக்கு எதிராக சதி செய்யும் இடமாக ஆளுநர் மாளிகை உள்ளது. அரசியல மைப்பு சட்டத்தின் முகப்புரையில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்ற வார்த்தையை நீக்க கோரி பாஜக தலைவர் சுப்பிர மணியசாமி வழக்கு தொடுத் துள்ளார். அரசமைப்புக்கு எதிராக செயல்படும் சுப்பிரமணியசாமி மீது  பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பாஜகவின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணை யம் ரத்து செய்ய வேண்டும் என்றார்.

ஜவாஹிருல்லா

இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எஸ்.ஜவா`ஹிருல்லா, “ஜனநாயக நாட்டில் உபா போன்ற சட்டமே இருக்க கூடாது. அந்த சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். வெடிகுண்டு வைத்தல் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை விசா ரிக்க அமைக்கப்பட்ட என்ஐஏ- விடம், தற்போது காதல், மாடு காணவில்லை என்பன போன்ற வழக்குகள் ஒப்படைக்கப்படு கின்றன. மாநில அரசுகளின் உரிமை களை பறிப்பதோடு, அரசியல் எதிரி களை பழிவாங்கும் வகையில் இந்த அமைப்பு பயன்படுத் தப்படுகிறது. எனவே, என்ஐஏ-வை கலைக்க வேண்டும். 11ஆம் தேதி நடைபெறும் மதநல்லிணக்க மனித சங்கிலியில் சங்கமிப்போம்” என்றார். இந்த போராட்டத்தில் விசிக துணைப்பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, தமிழக வாழ்வு ரிமைக் கட்சித் தலைவர் தி.வேல் முருகன் உள்ளிட்டோர் பேசினர்.


 

;