tamilnadu

img

ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கூடங்களாக தமிழக பள்ளிகள் !

சென்னை, ஜூலை 2 - தமிழக பள்ளி கூடங்கள் ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளது. அதை பள்ளிக் கல்வித் துறை கண்டு கொள்ளாமல் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் ‘நக்கீரன்’ இதழில் எழுதிய தொடர் ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ எனும் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நக்கீரன் பதிப்பகம் பதிப்பித்துள்ள இந்த நூல்  வெளியீட்டு விழா வெள்ளியன்று (ஜூலை 1) சென்னையில் நடைபெற்றது.. இந்த விழாவை இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு நடத்தியது. நூலின் முதல் பிரதியை கே.பால கிருஷ்ணன் வெளியிட, தமிழ்நாடு சிறு பான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர்  அல்போன்ஸ் பெற்றுக் கொண்டார்.

போர்வாள்

நிகழ்வில் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில் இடதுசாரிகள், மார்க்சிஸ்ட்டுகளால் விமர் சிக்கப்பட்ட காந்தியின் பெயரால், ‘மகாத்மா  மண்ணில் மதவெறி’ என தலைப்பிடப் பட்டுள்ளது என்றால், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனிக்க வேண்டும். மகாத்மா காந்தியை மறுவாசிப்புக்கு உட்ப டுத்த வேண்டும். மத நல்லிணக்கம், மதச்சார் பின்மையின் இமயமாக திகழ்ந்தவர் மகாத்மா காந்தி. ஆட்சியில் இருப்பவர்கள் மதத்தை கையிலெடுக்கும்போது, அது மனிதனுக்கு விரோதமாக மாறி விடுகிறது. மதவெறி ஆட்சியை வீழ்த்த மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றி ணைக்கும் சக்தியாக மகாத்மா திகழ்கிறார் என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது” என்றார். “ஒன்றிய அரசை விமர்சித்ததற்காக ஆப்ரின் பாத்திமா-வின் வீடு இடிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவர வழக்கில் மோடி, அமித்ஷாவை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. வழக்கை தொடுத்த டீஸ்டா செதல்வாட், காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமாரும் குற்றவாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இதைத்தான் நீதித்துறையில் ஊடுருவல் என்ற தலைப்பில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். கல்வி, நிர்வாகம், தேர்தல் ஆணையம், ராணுவம் போன்ற வற்றில் ஆர்எஸ்எஸ் ஊடுருவி உள்ளது. ராணுவமே மதவெறிக்கு ஆட்பட்டிருக்கிறது.  தமிழகத்தில் பள்ளிவளாகங்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா நடைபெறுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.   “இந்துத்துவம் என்பது வெறும் மதம் மட்டும்  அல்ல. சாதிய உணர்வை தூண்டி, அதை படிப் படியாக இந்துத்துவமாக மாற்றிக் கொள்கின்ற றனர். தமிழக பண்பாடு, வரலாற்றை முறியடிக்க  ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. சனாதன சக்திகளை எதிர்த்த தத்துவார்த்த போராட்டத் தின் போர்வாளாக இந்நூல் இருக்கும்” என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மதவெறி வைரஸ்

மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி அனுப்பிய வாழ்த்து செய்தியில், மத நல்லிணக்கம் மக்களின் இயல் பான குணம். புத்தர், மகாவீரர், விவேகானந்தர், ஸ்ரீநாராயண குரு, காந்தி போன்றோர் மக்களின்  மனத்துடிப்பை வெளிப்படுத்தினர். மதவெறி வன்முறையானது சமூகத்தின் மீதான நோயா கும். அதை மனித தன்மை மிக்க சிந்தனை கள் குணப்படுத்தும். இத்தகைய நோய் ஏற்படும்போது, அதை உடனடியாக உறுதியாக அரசு அல்லது சமூகம் சரி செய்ய வேண்டும். வைரஸ் கிருமிகளை ஒழிப்பதுபோன்று, மத வெறி நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும். அதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையூட்டும் நூல்

இந்தியா தனது கட்டுக் கோப்புகளை இழந்து  விழும் அபாயத்தில் உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் அச்சம் தெரி வித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன்பு வழி காட்டிய இ.எம்.எஸ்., பி.ஆர். என்.சங்கரய்யா போன்ற தலைவர்களின் பேச்சும் செயலும் ஒன்றாக இருந்தது. கல்வி நிலையங்களில் ஒவ்வொரு மாணவரும் அரசியல் தத்து வார்த்த பின்புலத்தோடு, வாசிப்போடு இருந்த னர். இன்றைய தலைமுறையிடம் அது இல்லை.  இளந்தலைமுறை அதிக சவால்களை எதிர் கொள்ள வேண்டி உள்ளது. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்நூல் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

மனங்களை வெல்வோம்

மகாத்மா காந்தியின் ஆளுமைகளை விளக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், காந்தியை இடதுசாரிகள் விமர்சித்தனர். அதே சமயம் காந்தியம் வழி உருவான மதச்சார் பின்மையை உயர்த்தி பிடிக்கின்றனர். மத வாதத்தில் இந்து, இஸ்லாம் என்று வேறு பாடில்லை என்றார் காந்தி. அதற்கேற்ப மத  நல்லிணக்கத்தை, மத சமத்துவத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது, அதற்கான கருத்தியல் பிரச்சாரத்தை செய்வதாக நூல் உள்ளது. மனித மனங்களை வெல்வதுதான் எழுத்தின் பணி. அதை இந்த நூல் செய்கிறது” என்றார்.

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அடுக்கடுக்காக ஓவியம் வரைந்து, அதை கொண்டு ராமாயணம், மகாபாரத கதைகளை சொல்கின்றனர். இதை செய்பவர்கள் இஸ்லாமியர்கள். அயோத்தியில் அன்சர் உசைன் பராமரிப்பில் சீதை கோவில் 45 ஆண்டு களாக இருந்தது. கலவரத்தில் அவரை விரட்டிவிட்டனர். குஜராத்தை சேர்ந்த லால்ஜிபாய், அயோத்தியில் வைத்திருந்த கோவிலில் ராமன், கிருஷ்ணனோடு ஏசு, புத்தனர், மகாவீரரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் அவர், குஜராத்தில் வைத்திருக்கும் கோவிலில் இவர்களோடு காரல் மார்க்சும் இடம் பெற்றுள்ளார். அதையும் மக்கள் வணங் குகின்றனர். இந்தியாவின் பன்மைத்துவம் காலம் காலமாக உள்ளது. இதற்கு மாறாக  வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி, வன்முறையை தூண்டுகின்றனர். கருத்தியல் ரீதியாக அவர்களை எதிர்கொள்ள வேண்டும்.

அடித்தட்டு மக்கள் மத்தியில் எப்போதும் அன்பும் கருணையும் நிறைந்துள்ளது. கருத்தி யல் ரீதியாக யாரோ ஒருவரால் தூண்டப்பட்டு  வன்முறைக்கு உள்ளாகிறோம். எனவே, மனங்களை வெல்வோம். நமது உணவு, உடையை யாரோ ஒருவரின் அதிகாரம் தீர் மானிக்க அனுமதிக்கக் கூடாது. அதற்கெதிராக பன்மைத்துவத்தை வளர்த்தெடுப்போம். அறிவியல், வரலாறில் மாற்றம் கொண்டு வர சொல்பவர்கள், மக்களை இருண்ட உலகிற்கு கொண்டு செல்கிறார்கள். அறிவியல் சிந்தனையை முன்னிறுத்த வேண்டும். தமிழ்ச்  சூழலுக்கும், இந்திய சூழலுக்கு மிக தேவையானது இந்த நூல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெருமை

“மகாத்மா நினைவு நாளில், காந்தியை கோட்சே கொன்றான் என்று சொல்லக் கூட கோவை காக்கிகள் ஜி.ராமகிருஷ்ணனை அனு மதிக்கவில்லை. அந்தளவிற்கு காவல் துறைக் குள்ளேயே ஊடுருவி உள்ளனர். அதேநாளில் தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர், காந்தியை கொன்ற கோட்சே வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என்று சூளுரைத் ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ் குறிக்கோள்களுக்கு தடையாக இந்த நூல் இருக்கும்.” என்று நக்கீரன் கோபால் தெரிவித்தார்.

நாளை என்பது மிகவும் தாமதமே

ஏற்புரையாற்றிய ஜி.ராமகிருஷ்ணன், பிராமணியம், சனாதனம், இந்துதேசம், சாதிய  கொடுமை, பெண்ணடிமைத்தனம் இவற்றை உள்ளடக்கியதுதான் இந்துத்துவம். இந்துத் துவா-வை எதிர்த்த போராட்டத்தில் வெற்றி பெற இந்நூல் வழிகாட்டியாக இருக்கும். பிடல்  காஸ்ட்ரோ சொல்வதுபோல், நாளை என்பது மிகவும் தாமதமே. அதற்கேற்ப நமது பணியை  தொடர்வோம்; மதவாதத்தை முறியடிப்போம்” என்றார். இந்நிகழ்வுக்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எம்.ஆர். சுரேஷ் வரவேற்றார். தி.நகர் பகுதிச் செயலாளர்  ஏ.தென்னரசு நன்றி கூறினார்.





 

;