tamilnadu

img

தீக்கதிர் நாளிதழ் கோவை பதிப்பின் விளம்பர மேலாளர் கே.அழகப்பன் பணி நிறைவு பாராட்டு விழா

தீக்கதிர் நாளிதழ் கோவை பதிப்பின் விளம்பர மேலாளர் கே.அழகப்பன் பணி நிறைவு பாராட்டு விழா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. தீக்கதிர் கோவை பதிப்பின் பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், என்.மனோஜ் பிரசாத் வரவேற்றார். இதில், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டி, சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், தீக்கதிர் எண்ம பதிப்பின் பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், மதுரை பதிப்பு பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மேலாளர் ஜோ.ராஜ்மோகன், சென்னை பதிப்பு மேலாளர் உஷா, சி.கல்யாண சுந்தரம், கோவை செய்தி ஆசிரியர் அ.ர.பாபு, கோவை பதிப்பு விநியோக மேலாளர்  ஏ.நெல்சன்பாபு, திருப்பூர் மாவட்டச் செய்தியாளர் வே.தூயவன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். முடிவில் கே.அழகப்பன் ஏற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.