tamilnadu

img

ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாத சிறைத் தண்டனை!

குஜராத் மாநில தலித் இளம் தலைவரும், சுயேட்சை எம்எல்ஏ-வுமான ஜிக்னேஷ் மேவானி, தனது ராஷ்டிரிய தலித் அதிகார் அமைப்பு சார்பில், கடந்த 2017 ஜூலை மாதம் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் ‘விடுதலை பேரணி’ ஒன்றை நடத்தினார். இதற்கு போலீஸ்  அனுமதி பெறவில்லை என்று கூறி, ஜிக்னேஷ் மேவானி உட்பட 10 பேருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தற்போது தலா 3 மாதம் சிறைத்தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.