tamilnadu

img

எங்களை போராடச் சொல்வது அரசு தான்.... மதுரையில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் கண்ணீர்....

மதுரை:
கொரோனா காலத்தில் “தனித்திரு,விழித்திரு” என்றார்கள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனித்திருந்தவர் களை விழித்திருந்து பணியாற்றினோம், அரசோ எங்களை தனிமைப்படுத்தி விட்டது. போராட்டம் நடத்துங்கள் என அரசேஎங்களை ஊக்குவிக்கிறது என தமிழ் நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் என கண்ணீர் வடித்தனர்.

எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கவேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை, தேனி, திண் டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்ஆர்பி செவிலியர்கள் மதுரையில் திங்களன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். எஸ். கே. சுஜாதா (மதுரை),  கே. கலா (திண்டுக்கல்), சுந்தரவள்ளி(தேனி), பாலாமணி (இராமநாதபுரம்), முத்துக்கனி (சிவகங்கை) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமதுரை மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, மாவட்டப் பொருளாளர் இரா.தமிழ், தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்க மதுரை மாவட்டச் செய
லாளர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

போராட்டத்தில பங்கேற்ற செவிலியர்களிடம் பேசியபோது, கொரோனா “தனித்திரு, விழித்திரு” என்றார்கள். விழித்திருந்து பணியாற்றினோம், அரசுஎங்களை தனிமைப்படுத்தி விட்டது. போராட்டம் நடத்துங்கள் என அரசேஎங்களை ஊக்குவிக்கிறது. எங்களது ஒற்றைக் கோரிக்கை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்பதுதான். கொரோனாகாலத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற் காக “மலர்தூவினார்கள், மணி அடித்தார்கள்” ஆனால் எங்களை நிரந்தரம் செய்ய மறுக்கின்றனர். கொரோனாகட்டுப்பாட்டில் தமிழகம் முதலிடம் எனமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அதற்குக் காரணம் மருத்துவத் துறையும் அதில் பணியாற்றும் செவிலியர்களும் தான். நாங்கள் செவிலியர் பணியை மட்டும் செய்யவில்லை, ஆயாக்கள் பணியையும் சேர்த்தே செய்கிறோம். எங்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.

;