tamilnadu

img

போராடுவது, சரிப்படுத்துவது, நாட்டைப் பாதுகாப்பது தொழிலாளி வர்க்கத்தின் கடமை

ஒவ்வொரு பயணியும் மொழிபெயர்ப்பாளரை அழைத்து வர முடியுமா?

மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தாம்  பேசுவதை பொது  மேலாளருக்கு மொழி பெயர்த்துக்கூறுமாறு வேண்டினேன். முதலில் மதுரை ரயில் நிலையத்தை சிறப்பாக வடி வமைத்ததற்கு நன்றி கூறினேன். கோட்ட  மேலாளர் மிகவும் நன்றி எனக் கூறினார்.  தொடர்ந்து பேசிய நான், ரயில் பயணத்திற்கு  டிக்கெட் வாங்குவதற்கு ஒவ்வொரு பயணியும்  தமிழ் தெரியாத இந்தி பேசுபவரி டம் உரையாடுவதற்காக ஒரு மொழி பெயர்ப்பாளரை அழைத்து வரமுடியுமா?  எனக் கேள்வியெழுப்பினேன். மொழி பெயர்ப்பா ளரும் அப்படியே அதை கோட்ட மேலாளருக்கு மொழி பெயர்த்தார். எனது உரைக்கு கோட்ட மேலாளர் ஒருவர் தான் அமைதியாக இருந்தார். மற்ற அதிகாரிகளிடமிருந்து உற்சாக வரவேற்பு... கைதட்டல். எந்த அளவிற்கு அதிகாரிகள் மன அழுத்தத்தில் உள்ளனர் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். கோட்ட மேலாளர் நான் ஒன்றும் செய்ய முடியாது. இது அரசின் கொள்கை முடிவு என்றார். யதார்த்தத்தை உரக்கச் சொல்ல வேண்டிய இடம் இதுதான் என அவருக்கு தெளிவுபடுத்தினேன்.

திருச்சிராப்பள்ளி, மே 27- போராடுவதும், சரிப்படுத்துவதும், நாட்டைப் பாதுகாப்பதும்  தான் தொழிலாளி வர்க்கத்தின் கடமை என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார். தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் 34-ஆவது மண்டல மாநாடு திருச்சிராப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து சு.வெங்கடேசன் எம்.பி., மேலும் பேசியதாவது:- யாரைச் சந்தித்தாலும் கை கூப்பி வணங்கு வது தமிழர் பண்பாடு. முஷ்டி உயர்த்தி புரட்சி வாழ்த்துக்களை தெரிவிப்பது தொழிலாளி வர்க்கத்தின் பண்பாடு. இந்த இரண்டிற்கும் தற்போது ஆபத்து வந்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டிற்கும், தமிழ் மண்ணிற்கும், மொழிக்கும் சவால் விடுக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கைகள் உள்ளன. தமிழ்மொழியே தெரியாத வட மாநிலத்த வரை தமிழகத்தில் பணியமர்த்துவதன் பின்னால்  சதி அரசியல் உள்ளது. தென்னக ரயில்வேயில்  20 சதவீதத்திற்கும் அதிகமான வட மாநிலத்தவர் களை கொண்டுவந்துவிட்டால் தமிழகச் சூழ லையே கையகப்படுத்திவிடலாம் என ஒன்றிய  அரசு நினைக்கிறது. இந்தச் சதியை முறியடிக்க வேண்டும்.

மோடி அரசு பேசுவதெல்லாம் தேசியம். ஆனால் செயல்பாடுகள் எல்லாம் கார்ப்பரேட்டு களிடம் பொதுத்துறையை தாரை வார்ப்பது தான். உலகிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இரயில்வே. தினம் தோறும் மூன்று   கோடிப் பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். மோடியின் கண்களை ரயில்வேதுறை உறுத்திக் கொண்டேயிருக்கிறது. ரயில்வே தண்டாள வத்திற்கு அடியில் உள்ள நிலத்தையும் விற்று விடவேண்டும் என்பது தான் ஒன்றிய அரசின் கொள்கை. விடுதலைப் போராட்டம் என்றால் காந்தியை மட்டும் கூறுவார்கள். ஆனால் நாட்டின் மேற்கு முனையில் கப்பற்படையில் இருந்த கம்யூ னிஸ்ட்டுகள் செய்த போராட்டம். கிழக்கு முனை யில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் அமைத்த ஐஎன்ஏ படை, இவர்களோடு இணைந்து போராட்டம் நடத்திய இரண்டு லட்சம் ரயில்வே  ஊழியர்கள் போராட்டமும் தான் பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு வெளியேற முக்கியக் காரணிகளாக இருந்தன.

தொழிற்சங்கங்கள் வெறும் பொருளாதார நலன் சார்ந்த கோரிக்கைகளை மட்டும் எழுப்பு பவை அல்ல. நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய வல்லமை தொழிலாளி வர்க்கத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் உண்டு என்பதை சுதந்திரப்போராட்டத்தில் ரயில்வே தொழிலாளர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பொறுப்பு வகிக்கும் என்னை சந்திக்கும் பலர் பிரச்சனையைத் தேடி நீங்கள் செல்கிறீர்களா? பிரச்சனை உங்களைத் தேடி வருகிறதா? என்ற கேள்வியை கேட்கின்றனர். பிரச்சனைகளை முகம் கொடுத்துக் கேட்பவர்களிடம் தான் கோரிக்கைகள் வந்து சேரும்.

தாயை பட்டினி போட்டு லாபம் என கூறலாமா?

ரயில்வே அமைச்சர், மூத்த குடிமக்களுக் கான சலுகை நிறுத்தப்பட்டதால் ரூ.1,500 கோடி  லாபம் என்றார். பெற்ற தாய்க்கு சோறு போட வில்லை இதனால் எனக்கு மாதம் ரூ.200 லாபம் என மகன் கூறினால் எப்படியிருக்கும். அதுபோலத்தான் இரயில்வே அமைச்சரின் பேச்சு உள்ளது. மூத்தவர்களின் தியாகத்தை மட்டுமல்ல அவர்களை பாதுகாப்பதற்கும் ஒன்றிய அரசிற்கு மனமில்லை.  தனியார்மயத்தை தொழிலாளி வர்க்கத்தால் முறியக்க முடியாதா? ஸ்காட்லாந்தில் அரசிடம்  இருந்த ரயில்வே தனியாரிடம் கொடுக்கப் பட்டது. தொழிலாளர்கள் நடத்திய போராட்டத் தால் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

ரயில்வேயை பாதுகாப்பது டிஆர்இயு-வின்  கையில் தான் உள்ளது. நீங்கள் நினைத்தால், நாம் (இடதுசாரிகள்) நினைத்தால் நிச்சயம் வெற்றி பெறமுடியும். அதற்குத் தேவை வலிமை யான போராட்டம் மட்டுமல்ல, அரசியல் உரை யாடலும் முக்கியம். அரசியல் இல்லாமல் எதுவும்  இல்லை. தொழிலாளர்கள் உரிமை அரசிய லோடு, நாட்டின் ஜனநாயகத்தோடு பின்னிப் பிணைந்தது. அரசின் கொள்கையை எதிர்த்து இடதுசாரி கள் நாடாளுமன்றத்தில் பேசுவது என்பது ஊசி யை நோயாளிக்கு செலுத்துவது போன்றது. அந்த ஊசியில் உள்ள மருந்து என்பது தொழிலாளி வர்க்கம் உருவாக்கிக் கொடுத்துள்ள கோரிக்கை கள். தொழிலாளி வர்க்கம் கலந்து கொடுக்கும் மருந்து எவ்வளவு வீரியம் மிக்கது என்பதை கம்யூ னிஸ்ட்டுகள் நாடாளுமன்றத்திலும், மக்கள்  மன்றத்திலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். நாட்டைப் பாதுகாக்கும் போராட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதில் கம்யூனிஸ்ட்டுகள் உறுதியாக இருப்பார்கள். உங்களது வலுமிக்க போராட்டங் கள் எங்களுக்கு உந்து சக்தியாக இருக்கு மென்றார்.

;