தெகுசிகல்பா, ஜன.24- மக்களின் ஆதரவோடு ஹோண்டு ராஸ் ஜனாதிபதியாகத் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி வேட்பாளர் சியாமரோ காஸ்ட்ரோவைப் பொறுப் பேற்க விடாமல் செய்யும் முயற்சி யில் வலதுசாரிகள் முயற்சி மேற் கொண்டுள்ளனர். நவம்பர் 28, 2021 அன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சியாமரோ காஸ்ட்ரோ வெற்றி பெற்றார். ஜனவரி 27, 2022 அன்று அவர் பொறுப்பேற்க விருக்கிறார். இந்நிலையில் அதைத் தடுக்கும் முயற்சிகளில் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத்துக்கு தலைவராக லூயிஸ் ரொடோன்டோ தேர்வாகியுள் ளார். நாடாளுமன்ற செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில், வேறொரு வரைத் தலைவராகத் தேர்வு செய்துள் ளதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள் ளன.
ஜனாதிபதியாக சியாமரோ காஸ்ட்ரோ பொறுப்பேற்கும் நிகழ் வில், லத்தீன் அமெரிக்க நாடுகளின் முன்னாள் ஜனாதிபதிகள் ணலூலா (பிரேசில்), இவோ மொரேல்ஸ் (பொலிவியா), பெர்னாண்டோ லுகோ (பராகுவே) மற்றும் டில்மா ரூசெப் (பிரேசில்) ஆகியோர் பங்கேற்க விருக்கிறார்கள். தற்போது ஜனாதிபதி களாக உள்ள சிலரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் சீர்குலைவு சக்திகள் தங்கள் சதிவேலைகளில் இறங்கியுள்ளன. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் சியாமரோ காஸ்ட்ரோ வின் ஆதரவாளர்கள் தலைநகர் தெகுசிகல்பாவில் உள்ள நாடாளு மன்றக் கட்டிடத்தின் முன்பாகக் குவிந்து வருகிறார்கள். பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்ற பின்தான் அங்கிருந்து செல்வோம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளு மன்றக் கட்டிடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் கள் தெரிவிக்கின்றன. ஆதரவாளர்கள் மத்தியில் உரை யாற்றிய சியாமரோ காஸ்ட்ரோ, “மக்க ளின் தீர்ப்பைத் தட்டிச் செல்லும் சர்வாதிகாரத்தின் முயற்சியை முறி யடிப்போம். கடந்த ஆட்சியின் சட்ட விரோத நடவடிக்கைகளைச் சரி செய்யவே புதிய தலைமையை நாட்டு மக்கள் தேர்வு செய்துள்ளனர். மக்க ளின் அந்தத் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். பாரம்பரியமாக அரசியல் நடத்தி வருவதாகச் சொல்லி, ஊழலில் திளைத்தவர்களை அகற்றவே மக்கள் வாக்களித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.