tamilnadu

img

விளையாட்டு

தமிழ்நாட்டில் இன்று ஐபிஎல் போட்டி
சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை

கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 18ஆவது சீசன் சனிக்கிழமை அன்று தொடங்கியது. இந்த  ஐபிஎல் தொடரில் விடுமுறை நாளான ஞாயிறன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.  முதல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகளும், 2ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணி களும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ள 2ஆவது லீக் ஆட்டம் தமிழ் நாடு தலைநகர் சென்னையில் நடைபெறு கிறது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை - மும்பை அணிகள் எலியும், பூனையுமாக இருப்பதால் இந்த ஆட்டம் மிக பரபரப் பாகவும், ரசிகர்களுக்கு அதிரடி விருந்தாக வும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெஸ்ஸி இல்லாமல் அர்ஜெண்டினா அசத்தல்

2026ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக 23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான தென் அமெரிக்க கண்ட உல கக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அர்ஜெண்டினா - உருகுவே அணிகள் பலப்பரீட்டை நடத்தின. இந்திய நேரப்படி சனிக்கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற  இந்த ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் இளம் வீரர்தி யாகோ அல்மடா கோல் அடித்து அசத்தினார். இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாகஅமைந்த நிலையில், ஆட்டநேர முடிவில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மெஸ்ஸி (காயம் காரணமாக விலகல்) இல்லாமல் பலமான உருகுவே அணியை வீழ்த்திய அர்ஜெண்டினா அணிக்கு கால்பந்து உலகில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. டிரா செய்தால் போதும் தென் அமெரிக்க கண்டத்தில் தகுதி சுற்று மூலம் உலகக்கோப்பை தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது தகுதிச் சுற்றுப் போட்டியின் புள்ளிப் பட்டியலில் அர்ஜெண்டினா 28 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதனால் பிரேசில் அணியுடனான ஆட்டத்தில் அர்ஜெண்டினா டிரா செய்தாலே போதுமானது.  அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றுவிடும். மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் பிரேசில் அணிக்கெதிரான  போட்டியிலும் மெஸ்ஸி விளையாடமாட்டார். அதே போல் காயம் காரணமாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மரும் இந்த ஆட்டத்தில் களமிறங்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்னும் 6 ஐபிஎல் போட்டிகள்

1. மார்ச் - 28 சென்னை - பெங்களூரு (8ஆவது லீக் ஆட்டம்) இரவு 7:30 மணி

2. ஏப்ரல் - 5 சென்னை - தில்லி (17ஆவது லீக் ஆட்டம்) மதியம் 3:30 மணி

3. ஏப்ரல் - 11 சென்னை - கொல்கத்தா  (25ஆவது லீக் ஆட்டம்) இரவு 7:30 மணி

4. ஏப்ரல் - 25  சென்னை - ஹைதராபாத் (43ஆவது லீக் ஆட்டம்) இரவு 7:30 மணி

5. ஏப்ரல் - 30  சென்னை - பஞ்சாப் (49ஆவது லீக் ஆட்டம்) இரவு 7:30 மணி

6. மே - 12 சென்னை - ராஜஸ்தான்  (63ஆவது லீக் ஆட்டம்) இரவு 7:30 மணி