8 ஆவது ஊதியக்குழு பயன்களை வழங்க வலியுறுத்தல்
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூலை 15- ஒன்றிய அரசின் மதிப்பீடு மசோ தாவை சட்டமாக்கியதை கண்டித்தும், 8 ஆவது ஊதியக்குழு பயன்களை வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவ தும் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத் தில் செவ்வாயன்று ஈடுபட்டனர். ஊதியக்குழுவின் பரிந்துரைகளி லிருந்து பழைய ஓய்வூதியர்களை நீக்கி வைக்கும் நிதி மசோதா ‘வேல்டேசன் சட்டத்தை’ ரத்து செய்ய வேண்டும். நான்கு தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பித்தர நிதி மேலாளர்களுக்கு ஆணை வழங்க வேண்டும். 1995 ஆம் ஆண்டு வருங் கால வைப்பு நிதி ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாநில அரசுகள் உடனடி யாக ஊதியக்குழுக்களை அமைக்க வேண்டும். ஒன்றிய அரசின் 8 ஆவது ஊதியக்குழுவின் பயன்களை ஊழி யர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஊதிய மாற்றம், ஓய்வூ திய மாற்றத்தை உயர்த்தி வழங்க வேண் டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை மாநில அரசுகளே நடத்த வேண்டும். தொடர் வண்டியிலும், வானூர்தியி லும் மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய் வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.மதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தபால் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் மேற்கு மண்டலச் செயலாளர் எஸ்.கருணாநிதி, ஓய்வூதிய சங்க மாநில துணைத் தலைவர் என்.அரங்கநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முடி வில், மாவட்டப் பொருளாளர் பி.நடரா ஜன் நன்றி கூறினார். இதில், மாவட்ட வட்டக்கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள், மாவட்டப் பொருளாளர் கே.கேசவன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன், மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, போக்குவரத்து ஓய்வூ தியர் சங்க மாநில இணைச்செயலாளர் கே.குப்புசாமி, மின்வாரிய ஓய்வூதியர் நலச்சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தர்ணாவிற்கு, ஓய்வூ தியர் சங்க மாவட்டத் தலைவர் எ.நட ராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.ராஜ்குமார் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஆர்.சுப்பிரமணி யம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று, புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று ஈரோட்டில் அகில இந் திய லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசி யேசன் சார்பில் குடியரசு தலைவருக்கு தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற் றது. இதில், ஈரோடு கிளைச்செயலாளர் பிரோஸ் ரகுமான், பொருளாளர் அய் யூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.