தேசிய குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக ஊதியம் பெறுவோர் எத்தனை பேர் தெரியுமா? மாத ஊதியம் வாங்குவோரில்- 50% நிரந்தரமற்ற ஊழியர்கள்-90% பேர் சுய வேலை வாய்ப்பின் கீழ் பணியாற்றுபவர்கள்- 60% ஆக மொத்தம் 30 கோடி பேர் இந்தியாவில் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக ஊதியம் பெறுகின்றனர். 30 கோடி பேர் என்பது ஜெர்மனி/ பிரான்ஸ் / பிரிட்டன்/ ஸ்பெயின்/ நெதர்லாந்து/ போர்ச்சுக்கல்/ அயர்லாந்து ஆகிய தேசங்களின் ஒட்டு மொத்த மக்கள் தொகையைவிட அதிகம். தேசிய குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக ஊதியம் பெறுவோர் மிகக்குறைவாக இருக்கும் மாநிலம் கேரளாதான்! அடுத்த இடத்தில் தமிழ்நாடு/ ஆந்திரா/ கர்நாடகா உள்ளன. குறைவான ஊதியம் பெறுவோர் அதிகமாக உள்ள மாநிலங்கள் இரட்டை என்ஜின் உத்தரப்பிரதேசம் / மத்தியப் பிரதேசம்/ சத்தீஸ்கர் ஆகியவை. இதுதான் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம். பா.ஜ.க.வை அகற்றுவோம்! மக்களின் வாழ்வாதாரத்தை காப்போம்!!